|
யாழ்.போதனா வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளரும் சிறந்த சமூக சேவையாளருமான வைத்திய கலாநிதி செல்வி நவமலர் கனகரத்தினம் நேற்று சுதுமலையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது-69.
செல்வி நவமலர் கனகரத்தினம் தற்போது தெல்லிப்பளை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரியாகவும், மருதனார்மடத்தில் இயங்கி வரும் கேன் புற்று நோய்க் காப்பக பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருந்து வந்துள்ள இவரின் முயற்சியால் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு நீண்டகாலத்தின் பின் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவரது சமூக சேவையைக் கௌரவித்து யாழ்.பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது. |