கிழக்கு மாகணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 11 உறுப்பினர்களது விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிபெற்றது. இவர்கள் ஐந்து ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திக் கூட்டமைப்பு நான்கு ஆசனங்களையும், ஜே.வி.பி. ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன. இதன்படி ஐ.தே.க. சார்பில் முன்னாள் எம்.பி.க்களான ரவூப் ஹக்கீம், எம்.எஸ்.தௌபீக், சின்ன மஹ்ரூப், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் அ.பரசுராமன், சட்டத்தரணி ந.இ.வரதன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் எம்.கே.டி.எஸ். குணவர்தன, ஹசன் மௌலானா, ஆரியவதி கலபதி, சட்டத்தரணி முஹமட் பாயிஸ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஜே.வி.பி. சார்பில் விமல் பியதிச தெரிவானார். பியதிச தெரிவானார்.