Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
சாம்பியன்ஸ் கிண்ண போட்டி பாகிஸ்தானில் கிரிக்கெட் சபையிடம் ஐ.சி.சி. உத்தரவாதம்
[12 - May - 2008] [Font Size - A - A - A]
செப்டெம்பர் 10 ஆம் திகதி தொடங்கும் சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறுமென்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி. உத்தரவாதம் அளித்துள்ளது.

டுபாயில் நடைபெற்ற ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் அஷ்ரப் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதற்கு முன் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஐ.சி.சி. திட்டமிடவுள்ளதாகத் தெரிகிறது. முதலில் ஜூன் மாதம் ஐ.சி.சி. மேற்பார்வைக் குழு பாகிஸ்தான் வந்து கிரிக்கெட் சபையுடன் போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிடுகின்றன. அதன் பிறகே இறுதி முடிவு தெரியவரும்.

இந்த ஐ.சி.சி. குழு பாகிஸ்தானில் பாதுகாப்புக் குறித்து எதிர்மறையான அறிக்கை சமர்ப்பித்தால் போட்டித் தொடர் இலங்கைக்கு மாற்றப்படும்.

ஆனால், ஜூன் மாதம் ஐ.சி.சி. பாகிஸ்தானில் போட்டிகளை நடத்தலாம் என்று கூறிவிடும் பட்சத்தில் அதன் பின் அங்கு பாதுகாப்பு விவகாரங்கள் மோசமடைந்தால் சாம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் ஒன்றில் ரத்துச் செய்யப்பட வேண்டும் அல்லது ஒத்தி வைக்கப்பட வேண்டும். ஆனால், மாற்று இடங்களில் நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
பாலாஜி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற சென்னை அணி பஞ்சாப்பை தோற்கடித்தது
ஐ.பி.எல். போட்டிகளில் டெண்டுல்கர் விளையாட வேண்டுமென்கிறார் மெக்ராத்
சாம்பியன்ஸ் கிண்ண போட்டி பாகிஸ்தானில் கிரிக்கெட் சபையிடம் ஐ.சி.சி. உத்தரவாதம்
ஹர்பஜனின் முகமூடி கிழிந்து விட்டது அவுஸ்திரேலிய கப்டன் பொன்டிங் கூறுகிறார்
ஹர்பஜன் - ஷ்ரீசாந்த் விவகாரத்தில் எவருக்கும் தண்டனை வழங்குமாறு சிபார்சு செய்யவில்லை
மோசமான ஆடுகளம் தயாரித்ததற்காக ஐ.சி.சி.யிடம் இந்தியா மன்னிப்புக் கேட்டது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com