Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
பாலாஜி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற சென்னை அணி பஞ்சாப்பை தோற்கடித்தது
[12 - May - 2008] [Font Size - A - A - A]
தமிழக வீரர் பாலாஜிக்கு சனிக்கிழமை பொன்னான நாள். இவர் ஐ.பி.எல். தொடரில் முதல் `ஹட்ரிக்' சாதனை நிகழ்த்த சென்னை சுப்பகிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விழ்த்தியது. கப்டன் தோனி, பத்ரிநாத்தின் அரைச்சதமும் சென்னை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

நேற்று முன்தினம் சென்னையில் நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை சுப்ப கிங்ஸ், யுவராஜ் தலையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. சென்னை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நாணயச் சுழற்சியில் வென்ற யுவராஜ் முதலில் களத்தடுப்பினைத் தேர்வு செய்தார்.

சென்னை அணி தொடக்கத்தில் தடுமாறியது. ஷ்ரீசாந்த் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த வித்யூத் 8 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இன்னொரு தொடக்க வீரரான பிளமிங்(1) ஷ்ரீசாந்த் வேகத்தில் வீழ்ந்தார். இதற்கு பின் சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் இணைந்து கலக்கினர். ஷ்ரீசாந்த் வீசிய 5வது ஓவரில் பத்ரிநாத் அடுத்தடுத்து பவுண்டரி விளாசினார். வி.ஆர்.வி.சிங் வீசிய அடுத்த ஓவரில் ரெய்னா ஒரு பவுண்டரி, பத்ரிநாத் ஒரு சிக்ஸர் அடித்தனர். பியுஸ் சாவ்லா வீசிய 7வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரி விளாசிய ரெய்னா (26) ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கப்டன் தோனி அதிரடியாக விளையாடினார்.6 கோடி ரூபா கொடுத்து வாங்கியதற்கான அர்த்தத்தை உணர்த்தினார். இவரிடம் இளம் பியுஸ் சாவ்லா தான் அதிகமாக அடி வாங்கினார். சாவ்லா வீசிய 9வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த தோனி 11வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு இமாலய சிக்ஸர்கள் விளாசினார்.

மறுபக்கம் பத்ரிநாத்தும் வாணவேடிக்கை காட்ட ஓட்ட எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இர்பான் பதான் வீசிய 13வது ஓவரில் பத்ரிநாத் இரண்டு சிக்ஸர் அடிக்க சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். ஒரு கட்டத்தில் தோனியை மிஞ்சிய பத்ரிநாத் மின்னல் வேகத்தில் அரைச்சதம் அடித்து அசத்தினார். இவர் வி.ஆர்.வி.சிங் பந்தில் 64 ரன்களுக்கு (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) ஆட்டமிழந்தார்.

தனது அசத்தல் ஆட்டத்தைத் தொடர்ந்த தோனி, ஹோப்ஸ் பந்தில் ஒரு சிக்சர் அடித்து அரைச்சதம் அடித்தார். சென்னை சுப்ப கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. தோனி 60 ரன்களுடன் (2 பவுண்டரி, 4 சிக்ஸர்) ஆட்டமிழக்காமலிருந்தார்.

கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி சென்னை பந்து வீச்சாளர்களின் வேகத்தில் ஆடிப்போனது. கோனி வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரி விளாசிய ஹோப்ஸ் (14) அதிக நேரம் நீடிக்கவில்லை. இவர் மோர்கல் பந்தில் தோனியிடம் பிடிகொடுத்து வெளியேறினார். கோனி வேகத்தில் கோயல் (1) வீழ்ந்தார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் ஷோன் மார்ஷ் மட்டும் போராடினார். பழனி அமர்நாத் வீசிய 9வது ஓவரில் இரண்டு சிக்ஸர் விளாசினார். பாலாஜி. முரளிதரன் பந்திலும் சிக்ஸர் அடித்து அரைச்சதம் அடித்தார்.

இந்த நேரத்தில் 13வது ஓவரை வீசிய தமிழக வீரர் பாலாஜி கலக்கினார். முதல் பந்தில் சர்வானை (20) போல்டாக்கினார். 5வது பந்தில் மார்ஷை (58) வெளியேற்றி இரட்டை அடி கொடுத்தார். அடுத்த ஓவரில் பழனிஅதிர்ச்சி கொடுத்தார். முதல் பந்தில் யுவராஜை (2) பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவர் வெளியேற பஞ்சாப் அணியின் வாய்ப்பு முழுமையாக தகர்ந்தது. முரளிதரன் ஒரு சுழலில் ஒரு சிக்ஸர் அடித்த ஜெயவர்த்தன (8) அதே ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர் இர்பான் பதான், பியூஸ் சாவ்லா இணைந்து போராடினர்.

கடைசி ஓவரில் 27 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற சிக்கலான நிலை பஞ்சாப் அணிக்கு ஏற்பட்டது. அருமையாக பந்து வீசிய பாலாஜி ஹட்ரிக் சாதனை நிகழ்த்தி வெற்றியை உறுதி செய்தார். பதான் 40 ஓட்டங்களுக்கு (3 சிக்ஸர், 3 பவுண்டரி) ஆட்டமிழந்தார். சாவ்லா 17 ஓட்டங்கள் எடுத்தார். கிங்ஸ் வென் பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. 5 விக்கெட் வீழ்த்திய பாலாஜி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியை தமிழகத்தின் வெற்றி என்று கூறலாம். பத்ரிநாத் அதிரடி அரைச்சதம் மூலம் கைகொடுத்தார். பந்து வீச்சில் தமிழக வீரர் பாலாஜி அசத்தினார். இவர் 4 ஓவரில் ஹட்ரிக் சாதனை உட்பட 5 விக்கெட் வீழ்த்தி பழைய பாலாஜியாக ஜொலித்தார்.

முதன்முறையாக கடைசி ஓவரில் பஞ்சாப் அணி 27 ஓட்டங்கள் எடுக்க வேண்டும். பாலாஜி அனல் பறக்க பந்து வீசினார்.

முதல் பந்தில் இர்பான் பதான் சிக்ஸர் அடிக்க பதற்றமேற்பட்டது.

இரண்டாவது பந்தில் இரண்டு ஓட்டம் கிடைத்தது.

3வது பந்தை பதான் தூக்கி அடிக்க ரெய்னா கட்ச் பிடிக்க பரிதாபமாக ஆட்டமிழந்தார்.

4வது பந்தை பியுஸ் சாவ்லா அடிக்க கப்புகெதர கட்ச் பிடிக்க சென்னை ரசிகர்கள் உற்சாகமாயினர்.

5வது பந்து இம்முறை சாதித்தால் தொடர்ந்து 3 விக்கெட் வீழ்த்தி ஹட்ரிக் சாதனை படைக்கலாம். பந்தை பவுன்சராக வீசுகிறார். வி.ஆர்.வி,சிங் அடிக்கிறார். தோனி ஓடிச்சென்று கட்ச் பிடிக்க ஐ.பி.எல் தொடரின் முதல் ஹட்ரிக் சாதனை படைத்தார் பாலாஜி. 6வது பந்தில் ஓட்டம் கொடுக்காத நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Email this page Your Opinion Print this page
பாலாஜி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற சென்னை அணி பஞ்சாப்பை தோற்கடித்தது
ஐ.பி.எல். போட்டிகளில் டெண்டுல்கர் விளையாட வேண்டுமென்கிறார் மெக்ராத்
சாம்பியன்ஸ் கிண்ண போட்டி பாகிஸ்தானில் கிரிக்கெட் சபையிடம் ஐ.சி.சி. உத்தரவாதம்
ஹர்பஜனின் முகமூடி கிழிந்து விட்டது அவுஸ்திரேலிய கப்டன் பொன்டிங் கூறுகிறார்
ஹர்பஜன் - ஷ்ரீசாந்த் விவகாரத்தில் எவருக்கும் தண்டனை வழங்குமாறு சிபார்சு செய்யவில்லை
மோசமான ஆடுகளம் தயாரித்ததற்காக ஐ.சி.சி.யிடம் இந்தியா மன்னிப்புக் கேட்டது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com