பிலிப்பைன்ஸில் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக பிலிப்பைன்ஸ் பாராளுமன்றில் பிரேரணை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் குழந்தைகளுக்கு ஆரம்ப மற்றும் நடுநிலைக் கல்வியை அந்நாட்டு அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இருந்தாலும் வறுமை காரணமாக கணிசமான குழந்தைகள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள்.
இந்தநிலையில், குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் பிரேரணை பிலிப்பைன்ஸ் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பாடசாலைக்குச் செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரும் கண்டிப்பாக பாடசாலைக்குச் சென்று ஆரம்பக் கல்வி பயில வேண்டும். குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப பாடசாலைக்கு வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று அந்த பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்பாமல் இருப்பதற்கு வறுமையைக் காரணமாகக் கூறி தப்பிக்க முடியாது. வறுமையை ஒழிக்கும் திட்டமே கல்விதான் என்று பிலிப்பைன்ஸ் கல்விச் செயலாளர் ஜெஸ்லி லாபஸ் தெரிவித்தார்.