Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளியினர் மீண்டும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
[13 - May - 2008] [Font Size - A - A - A]
மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளியினர் நேற்று முன்தினம் மீண்டும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் இந்து உரிமை நடவடிக்கை இயக்கத் தலைவர் பி. உதயகுமாரை விடுதலை செய்யக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்தியர்களுக்கு சம உரிமை கோரி கோலாலம்பூரில் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தை அடுத்து உதயகுமார் உட்பட இந்திய வம்சாவளியினர் 5 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிறையில் உள்ள உதயகுமாருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே, அவருக்கு கோலாலம்பூரில் உள்ள தேசிய இதயச் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இத்தகவலை இந்து உரிமை நடவடிக்கை இயக்கத் தலைவர் வைத்தியமூர்த்தியின் மனைவி ஈஸ்வரி தெரிவித்தார். இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள உதயகுமாருக்கு சிகிச்சை அளிக்கக் கோரி மலேசியாவில் பல்வேறு இடங்களில் இந்திய வம்சாவளியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உதயகுமாரின் நிலைமை மிகவும் மோசமாகி வருவதாக இந்து இயக்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யுமாறு உதயகுமாரின் தாய் பிரதமர் படாவியைச் சந்தித்து மனுகொடுக்க உள்ளார். அன்னையர் தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டி மகனை விடுதலை செய்ய அவர் கோரியுள்ளார்.

Email this page Your Opinion Print this page
மியன்மாரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் 2 இலட்சத்திற்கும் அதிகம்
மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளியினர் மீண்டும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
புஷ்ஷின் மகள் திருமணத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அழைப்பு
ஞாயிறு மதிய உணவிற்காக 442 கி.மீ பயணம் செய்யும் முதியவர்
சாட்டுடனான இராஜதந்திர தொடர்புகளை துண்டித்தது சூடான் அரசு
பிலிப்பைன்ஸில் பாடசாலைக்கு குழந்தைகளை அனுப்பாத பெற்றோருக்கெதிராகப் பிரேரணை
எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து இருளில் மூழ்கியது காஸா
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com