யாழ்.மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் பரவலாக துண்டுப்பிரசுரங்களை ஒட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சுவரொட்டிகளில் அன்பான பெற்றோர்களே என விழித்து உங்கள் சிறுவர்கள் பருவகால இளைஞர், யுவதிகள் யுத்தத்துக்கு இரையாகி வருவதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றே விழித்தெழுங்கள் என்று பிரசுரிக்கப்பட்டிருக்கும் அதே நேரம் மேலும் பல நிழற்படங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் சுவரொட்டிகள் நகர மற்றும் மாநகர பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களான சந்தைகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பஸ் தரிப்பு நிலையங்கள், வியாபார நிலையங்கள், அரச செயலகங்கள் போன்ற இடங்களை மையப்படுத்தி ஒட்டப்பட்டிருப்பதாகவும் யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.