Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சகல துறையிலும் ஜொலித்தார் கங்குலி கொல்கத்தா அணி 23 ஓட்டங்களால் வெற்றி
[13 - May - 2008] [Font Size - A - A - A]
`ருவன்ரி-20' போட்டியிலும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கப்டன் கங்குலி. அதிரடியாக 91 ஓட்டங்களை எடுத்த இவர் 2 விக்கெட் வீழ்த்தி சகல துறைகளிலும் அசத்த.. கொல்கத்தா அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டெக்கான் சார்பில் போராடிய வேணுகோபாலின் அதிரடி அரைச்சதம் வீணானது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) `ருவன்ரி-20' தொடர் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடந்த 32 ஆவது லீக் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.லட்சுமண் காயம் குணமடையாததால் டெக்கான் அணியின் கப்டன் பொறுப்பை மீண்டும் கில்கிறிஸ்ட் ஏற்றார். நாணயச் சுழற்சியில் வென்ற கங்குலி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

மேற்கிந்திய சுற்றுப்பயணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த பிராட் ஹொட்ஜ் நாடு திரும்பினார். இவருக்குப் பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பாகிஸ்தானின் சல்மான் பட் வாய்ப்புப் பெற்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அக்தருக்கு இம்முறையும் அணியில் இடம் கிடைக்கவில்லை. டெக்கான் அணியில் மோசமான போர்ம் காரணமாக அப்ரிடி நீக்கப்பட்டு சமிந்தவாஸ் இடம்பிடித்தார்.

கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர்களாக ஆகாஷ் சோப்ரா, சல்மான் பட் களமிறங்கினர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளத் தவறிய சல்மான் (4) முதல் ஓவரிலே அரங்கு திரும்பினார்.

அடுத்து கங்குலி வந்தார். வாஸ் வீசிய 3 ஆவது ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரிகளை விரட்டினார். அடுத்த ஓவரிலும் இவர் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். மறுமுனையில் ஆகாஷ் சோப்ரா இவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். ஆகாஷ் சோப்ரா (24), கிப்சின் துல்லிய `த்ரோவில்' ரன் அவுட்டானார்.

நான்காவது வீரராக டேவிட் ஹசி வந்தார். வேணுகோபால் பந்தில் பவுண்டரி அடித்து கங்குலி அரைச்சதமடித்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் ஓஜா வீசிய 14 ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்து அசத்தினார். பின்னர் ஒரு பவுண்டரியும் விளாச அந்த ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மொத்தம் 19 ஓட்டங்கள் கிடைத்தது.

தொடர்ந்து கலக்கிய கங்குலி, ஸ்டைரிஸ் ஓவரில் இரண்டு இமாலய சிக்சர்கள் விளாசி ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினார். வாஸ் வீசிய அடுத்த ஓவரில் இந்த ஜோடி 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க ஓட்ட விகிதம் `ரொக்கெட்' வேகத்தில் எகிறியது.

மறுமுனையில் ஹசி, ஆர்.பி.சிங் ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட மொத்தம் 20 ஓட்டங்கள் எடுத்து அரைச்சதம் பதிவுசெய்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கங்குலி அரங்கு திரும்பினார். 5 சிக்சர், 11 பவுண்டரி அடித்த இவர் 57 பந்தில் 91 ஓட்டங்கள் எடுத்து சதவாய்ப்பை நழுவவிட்டார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் எடுத்தது. டேவிட் ஹசி 57 (3 சிக்சர், 4 பவுண்டரி), சுக்லா 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தனர்.

கடின இலக்கை சேஸ் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் தொடக்கத்தில் தடுமாறியது. டின்டா வேகத்தை எதிர்கொள்ள திணறிய கிப்ஸ் (5), கில்கிறிஸ்ட் (24) வரிசையாக அரங்குக்கு திரும்பினர். பந்து வீச்சில் கலக்கிய கங்குலி ஸ்டைரிசை (5) வெளியேற்றி அணியின் வெற்றி நம்பிக்கையை அதிகரித்தார்.

அடுத்து நல்ல போர்மில் இருக்கும் ரோகித் சர்மா வந்தார். கங்குலி பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். இவரது அடுத்த ஓவரில் மீண்டும் ஒரு சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு கிரிக்கெட் விருந்து படைத்தார். இதையடுத்து கப்டன் கங்குலி, டின்டாவிடம் பந்தை கொடுத்தார். இதற்கு உடனடியாகப் பலன் கிடைத்தது. இவர் 2 சிக்சர், 3 பவுண்டரி அடித்த ரோகித் சர்மாவை (33) அரங்கிற்கு அனுப்பி வைத்தார்.

பங்கர் (2), வாஸ் (9) விரைவில் வெளியேறினர். ஒரு முனையில் வரிசையாக விக்கெட்டுகள் விழுந்த போதிலும் மறுமுனையில் வேணுகோபால் அதிரடி காட்டினார். இஷாந்த் பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்துக் கலக்கினார். குல் பந்தில் `மெகா' சிக்சர் அடித்து அரைச் சதம் பதிவுசெய்து ஆறுதலளித்தார்.

ஓவருக்கு ஒரு சிக்சர் வீதம் கொல்கத்தா பந்து வீச்சை சிதறடித்த இவர் இறுதிவரை அணியின் வெற்றிக்காகப் போராடினார். 6 சிக்சர், 4 பவுண்டரி விளாசிய இவர் 42 பந்தில் 71 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமலிருந்தார். டெக்கான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.

Email this page Your Opinion Print this page
சீனாவில் பூகம்ப அனர்த்தம் 9 ஆயிரம் பேர் பலி; 10 ஆயிரம் பேர் காயம்
தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக ரணில், ஹக்கீம் வீதிப் போராட்டம்
பொலிஸ் அதிகாரம் புதிய கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்படுமா? பதிலளிக்காமல் அரசதரப்பு தவிர்ப்பு
தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது அரசாங்கம்
நானே முதலமைச்சர்;தட்டிப்பறிக்க பிள்ளையானுக்கு இடமளியேன்
மன்னார் மோதலில் 2 படையினர் பலி
விமல் வீரவன்ச தலைமையில் நாளை `தேசிய சுதந்திர முன்னணி' அங்குரார்ப்பணம்
கலாநிதி தேவநேசன் நேசையா தொடர்ந்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்
68 தமிழ் அரசியல்கைதிகள் வெலிக்கடை, மகசீன் சிறைகளிலிருந்து பூசாவுக்கு திடீர் இடமாற்றம்
ஒக்ஸ்போட் யூனியனில் இன்று ஜனாதிபதி உரை
பூசாவிற்கு தமிழ்க் கைதிகள் இடமாற்றம் தமிழ் கூட்டமைப்பு கடும் கண்டனம்
நுவரெலியா மாவட்டத்தில் 2 சனசமூக நிலையங்களை நிர்மாணிக்க நடவடிக்கை
தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே திருமலை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிப்பு
மூதூர் படுகொலை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது ஒசாமா குழு தொடர்பாகவும் நான் அறிந்திருக்கவில்லை
வத்துகாமம் புதுக்காட்டு பிரதேசத்தில் திடீர் தேடுதல்; எட்டு இளைஞர்கள் கைது
நீதி, சுதந்திரமான தேர்தலென கூறுவது கடினமான விடயம்
அரச சார்பற்ற நிறுவனத்தில் பணிபுரிந்த யாழ் .யுவதி வெள்ளை வானில் கடத்தல்
சுவிஸ் சிரேஷ்ட இராணுவ அதிகாரி குடாநாடு சென்று நிலைமைகளை ஆராய்வு
ஐ.ம.சு.மு. வென்றதையடுத்து பட்டாசு கொளுத்தி ஆரவாரம்
வவுனியா வைத்தியசாலை சுகாதாரசேவை சிற்றூழியர்கள் இருமணிநேரம் பகிஷ்கரிப்பு
வடக்கே தாதியர் பயிற்சிக்கு தெரிவானோர் 15 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும்
கொக்குவிலில் தனியார் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் நேற்றிரவு சுட்டுக்கொலை
மட்டு.நகரில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு சார்ஜன்ற் பலி; கான்ஸ்டபிள் படுகாயம்
கல்முனையில் அதாவுல்லா மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்
காட்டில் மரங்களை வெட்டி கடத்த முயன்ற இரு ஊர்காவல் படையினருக்கு 6 மாத சிறை
100 கிலோ கஞ்சாவை லொறிக் கூரையில் மறைத்து வைத்து கடத்திய இருவர் கைது
எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் பலி
தேர்தல் ஆணையாளரின் கூற்று அவரது சுயாதீன போக்குக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது
மாற்றுக் கருத்துகளை ஜீரணிக்க முடியாமலிருப்பதே எமது நாட்டின் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம்
திருமலை கரும்புலித் தாக்குதல் படகில் இயந்திர கட்டமைப்பை கட்டியமைத்தவர் `கடாபி'
கல்வித்துறையில் எட்டியுள்ள முன்னேற்றமே சமூகமொன்றின் வளர்ச்சிக்கான அளவுகோல்
வீட்டு வேலைக்கு பணத்துக்காக ஆட்திரட்டும் தரகர்களால் மலையக சிறார்களின் எதிர்காலம் மோசமாகப் பாதிப்பு
மண்சரிவு அபாயம்; துல்கல பகுதி மக்களை இடம்பெயருமாறு பிரதேச செயலர் அறிவுறுத்தல்
இளைஞர், யுவதிகளிடையே இன நல்லுறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு
சமாதானத்தை உருவாக்குவதற்கான பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது
சிக்குன் குன்யா பரவுவது அதிகரிக்கலாம் ராகமை நரம்பியல் பிரிவு எச்சரிக்கை
வடக்கு மக்களுக்கான சிறந்த நிர்வாகத்தை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம்
ராஜஸ்தானின் ஆதிக்கம் தொடர்கிறது சேவாக்கின் அணியையும் தோற்கடித்தது
சகல துறையிலும் ஜொலித்தார் கங்குலி கொல்கத்தா அணி 23 ஓட்டங்களால் வெற்றி
அறிவுசார் சமுதாயம் உருவாக வேண்டுமானால் அதிகம் வாசித்து அறிவுத் தேடல் பெற வேண்டும்
தீவுப்பகுதியின் முக்கிய வீதிகள் திருத்தப்படாததால் இன்னல்களை எதிர்நோக்கும் மக்கள்
வவுனியா - மதவாச்சி இணைப்பு ரயில் சேவை அடுத்த வாரம் முதல் நடைபெறவுள்ளது
யாழ்.மாவட்டத்தில் படையினரின் துண்டுப்பிரசுரம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com