Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ராஜஸ்தானின் ஆதிக்கம் தொடர்கிறது சேவாக்கின் அணியையும் தோற்கடித்தது
[13 - May - 2008] [Font Size - A - A - A]
ஐ.பி.எல். தொடரில் வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடந்த பரபரப்பான லீக் போட்டியில் வட்சன் தூள் கிளப்ப, சேவாக்கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற வோர்ன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

வழக்கத்துக்கு மாறாக மந்தமாக ஆடிய சேவாக் 17 ஓட்டங்களுக்கு (20 பந்தில்) வட்சன் பந்தில் வீழ்ந்தார். அருமையான போர்மிலிருக்கும் காம்பிர் மட்டும் பவுண்டரிகளாக விளாசி நம்பிக்கையளித்தார். இவர் திரிவேதி பந்தில் 31 ஓட்டங்களுக்கு போல்டாக சிக்கல் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் 14 வது ஓவரை வீசிய மஸ்கரனாஸ் கலக்கினார். டிவிலியர்ஸ்(20), தினேஸ் கார்த்திக்கை (13) ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் திலகரட்ன டில்ஷான், மக்ரூப் இணைந்து அதிரடியாக விளையாடி கைகொடுத்தனர். வோர்ன் வீசிய 19 ஆவது ஓவரில் மக்ரூப் நான்கு சிக்சர்கள் விளாச.... மொத்தமாக 27 ஓட்டங்கள் கிடைத்தது. மக்ரூப் 16 பந்துகளில் 39 ஓட்டங்கள் (4 சிக்சர், 2 பவுண்டரி) விளாசினார். டில்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்கள் எடுத்தது.

இலகுவான இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் திணறியது. மெக்ராத் மிகவும் கஞ்சத்தனமாக பந்து வீசினார். முதல் 3 ஓவரில் 6 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். கடந்த போட்டியில் கலக்கிய யூசுப் பதான் (8) இம்முறை பரிதாபமாக ரன் அவுட்டானார். சிறிது நேரத்தில் சேவாக்கின் துல்லிய `த்ரோவில்' கைப் (1) ஓட்டம் எடுத்து அவுட்டாக, நெருக்கடி ஏற்பட்டது. இதற்குப்பின் ஸ்மித், வட்சன் இணைந்து அசத்தலாக ஆடினர். மகேஷ் வீசிய 7 வது ஓவரில் வட்சன் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். ஸ்மித் 24 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.

ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் தனது அதிரடியை தொடர்ந்தார் வட்சன். ஆட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்ட இவர் மிஷ்ரா வீசிய 15 ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். சேவாக் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். இவர் சர்ச்சைக்குரிய முறையில் 74 ஓட்டங்களுக்கு (5 பவுண்டரி, 5 சிக்சர்)ரன் அவுட்டானார்.

கடைசி ஓவரில் 1 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. மகேஷ் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ராவத் பவுண்டரி அடிக்க, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்து இன்னொரு சிறப்பான வெற்றியை பெற்றது. ஆட்ட நாயகனாக வட்சன் தேர்வு செய்யப்பட்டார்.

மக்ரூப் வீசிய 19 ஆவது ஓவர் பரபரப்பு ஏற்படுத்தியது. முதல் பந்தில் வோர்ன் ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்தில் ஒரு ஓட்டத்திற்காக ஓட முற்பட்டார் வட்சன். அதற்குள் பந்தை பெற்ற விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் விக்கெட்டை தகர்த்தார். ஆனால் நடுவர் ஸ்ரீவ் டேவிஸ் `அவுட்' கொடுக்க மறுத்தார்.

`ரீபிளேயில்' வட்சன் அவுட் என்பது தெளிவாக தெரிந்தது. உடனே இன்னொரு நடுவர் ரூடி கோஜர்ட்சனிடம் டில்லி கப்டன் சேவாக் புகார் கூற, மூன்றாவது நடுவரிடம் கேட்கப்பட்டது. இதில் வட்சனுக்கு ரன் அவுட் கொடுக்கப்பட்டது.

இதற்கு முன் சிமித் `கட்ச்' தொடர்பாக கங்குலி சர்ச்சை கிளப்பினார். தற்போது சேவாக்கும் களத்திலிருக்கும் நடுவரை மூன்றாவது நடுவரிடம் கேட்கும்படி நிர்ப்பந்தித்துள்ளார். இதனால் மீண்டும் ஒரு சர்ச்சை வெடிக்கலாம்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் பூகம்ப அனர்த்தம் 9 ஆயிரம் பேர் பலி; 10 ஆயிரம் பேர் காயம்
தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக ரணில், ஹக்கீம் வீதிப் போராட்டம்
பொலிஸ் அதிகாரம் புதிய கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்படுமா? பதிலளிக்காமல் அரசதரப்பு தவிர்ப்பு
தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது அரசாங்கம்
நானே முதலமைச்சர்;தட்டிப்பறிக்க பிள்ளையானுக்கு இடமளியேன்
மன்னார் மோதலில் 2 படையினர் பலி
விமல் வீரவன்ச தலைமையில் நாளை `தேசிய சுதந்திர முன்னணி' அங்குரார்ப்பணம்
கலாநிதி தேவநேசன் நேசையா தொடர்ந்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்
68 தமிழ் அரசியல்கைதிகள் வெலிக்கடை, மகசீன் சிறைகளிலிருந்து பூசாவுக்கு திடீர் இடமாற்றம்
ஒக்ஸ்போட் யூனியனில் இன்று ஜனாதிபதி உரை
பூசாவிற்கு தமிழ்க் கைதிகள் இடமாற்றம் தமிழ் கூட்டமைப்பு கடும் கண்டனம்
நுவரெலியா மாவட்டத்தில் 2 சனசமூக நிலையங்களை நிர்மாணிக்க நடவடிக்கை
தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே திருமலை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிப்பு
மூதூர் படுகொலை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது ஒசாமா குழு தொடர்பாகவும் நான் அறிந்திருக்கவில்லை
வத்துகாமம் புதுக்காட்டு பிரதேசத்தில் திடீர் தேடுதல்; எட்டு இளைஞர்கள் கைது
நீதி, சுதந்திரமான தேர்தலென கூறுவது கடினமான விடயம்
அரச சார்பற்ற நிறுவனத்தில் பணிபுரிந்த யாழ் .யுவதி வெள்ளை வானில் கடத்தல்
சுவிஸ் சிரேஷ்ட இராணுவ அதிகாரி குடாநாடு சென்று நிலைமைகளை ஆராய்வு
ஐ.ம.சு.மு. வென்றதையடுத்து பட்டாசு கொளுத்தி ஆரவாரம்
வவுனியா வைத்தியசாலை சுகாதாரசேவை சிற்றூழியர்கள் இருமணிநேரம் பகிஷ்கரிப்பு
வடக்கே தாதியர் பயிற்சிக்கு தெரிவானோர் 15 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும்
கொக்குவிலில் தனியார் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் நேற்றிரவு சுட்டுக்கொலை
மட்டு.நகரில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு சார்ஜன்ற் பலி; கான்ஸ்டபிள் படுகாயம்
கல்முனையில் அதாவுல்லா மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்
காட்டில் மரங்களை வெட்டி கடத்த முயன்ற இரு ஊர்காவல் படையினருக்கு 6 மாத சிறை
100 கிலோ கஞ்சாவை லொறிக் கூரையில் மறைத்து வைத்து கடத்திய இருவர் கைது
எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் பலி
தேர்தல் ஆணையாளரின் கூற்று அவரது சுயாதீன போக்குக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது
மாற்றுக் கருத்துகளை ஜீரணிக்க முடியாமலிருப்பதே எமது நாட்டின் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம்
திருமலை கரும்புலித் தாக்குதல் படகில் இயந்திர கட்டமைப்பை கட்டியமைத்தவர் `கடாபி'
கல்வித்துறையில் எட்டியுள்ள முன்னேற்றமே சமூகமொன்றின் வளர்ச்சிக்கான அளவுகோல்
வீட்டு வேலைக்கு பணத்துக்காக ஆட்திரட்டும் தரகர்களால் மலையக சிறார்களின் எதிர்காலம் மோசமாகப் பாதிப்பு
மண்சரிவு அபாயம்; துல்கல பகுதி மக்களை இடம்பெயருமாறு பிரதேச செயலர் அறிவுறுத்தல்
இளைஞர், யுவதிகளிடையே இன நல்லுறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு
சமாதானத்தை உருவாக்குவதற்கான பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது
சிக்குன் குன்யா பரவுவது அதிகரிக்கலாம் ராகமை நரம்பியல் பிரிவு எச்சரிக்கை
வடக்கு மக்களுக்கான சிறந்த நிர்வாகத்தை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம்
ராஜஸ்தானின் ஆதிக்கம் தொடர்கிறது சேவாக்கின் அணியையும் தோற்கடித்தது
சகல துறையிலும் ஜொலித்தார் கங்குலி கொல்கத்தா அணி 23 ஓட்டங்களால் வெற்றி
அறிவுசார் சமுதாயம் உருவாக வேண்டுமானால் அதிகம் வாசித்து அறிவுத் தேடல் பெற வேண்டும்
தீவுப்பகுதியின் முக்கிய வீதிகள் திருத்தப்படாததால் இன்னல்களை எதிர்நோக்கும் மக்கள்
வவுனியா - மதவாச்சி இணைப்பு ரயில் சேவை அடுத்த வாரம் முதல் நடைபெறவுள்ளது
யாழ்.மாவட்டத்தில் படையினரின் துண்டுப்பிரசுரம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com