இலங்கையின் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் சிக்குன்குன்யா நோய் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என ராகம வைத்திய பீடத்தின் நரம்பியல் பிரிவுக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
"இந்நோய் பரவுவதற்கு தற்போதைய மழை காலநிலை பெரும்பாலும் காரணமாக அமைந்துள்ளதாக" அந்தப் பிரிவின் விரிவுரையாளர் கலாநிதி விமலதர்ம அபேவிக்ரம தெரிவித்தார்.
தேயிலை, இறப்பர் மற்றும் வாழைச் செய்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் சிக்குன்குன்யா நோயின் தாக்கம் கூடுதலாக காணப்படுவதாகவும் மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் மேலும் தெரிவித்தார்.