Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வீட்டு வேலைக்கு பணத்துக்காக ஆட்திரட்டும் தரகர்களால் மலையக சிறார்களின் எதிர்காலம் மோசமாகப் பாதிப்பு
[13 - May - 2008] [Font Size - A - A - A]
மலையக சிறார்களை வீட்டு வேலைக்காக சேர்த்து பணம் சம்பாதிக்கும் தரகர்களால், அச்சிறுவர்களின் எதிர்காலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பவர் நிறுவனத்தின் உறுப்பினரான கே.ரஞ்சனிமாலா தெரிவித்தார்.

மேலும் பணத்துக்காக பிள்ளைகளை செல்வந்தர் வீடுகளில் பணியாற்ற அனுமதிக்கும் பெற்றோராலும் இச் சிறுவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மலையக சிறுவர்களின் நல உரிமைகளை பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தி வெளியான அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சிறுவர்களின் நீண்டகால நலன்களை கவனத்தில் கொண்டு, அவர்களுக்கென பல விசேட உரிமைகள் வகுத்துரைக்கப்பட்டுள்ள போதிலும், குறிப்பாக மலையக, சிறார்களின் நலன்கள் எந்தளவுக்கு பேணப்படுகின்றன என்பது இன்று கேள்விக்குறியாகவே உள்ளது.

இந் நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மலையக மக்கள் பரம்பரை பரம்பரையாக தோட்ட தொழிலாளர்களாகவே தமது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் பிள்ளைகளில் ஒரு சிறிய தொகையினர் மாத்திரமே கௌரவமான தொழில்களில் அமர்ந்துள்ளனர்.

ஆனால், தொடர்ந்தும் பல மலையக சிறுவர் சிறுமியர் கடைகளிலும் வீடுகளிலும், வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். சிறுவர் சிறுமியரை வேலக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாயினும் சில பெற்றோர் பணத்துக்காக தமது பிள்ளைகளை பணக்கார வீடுகளில் வேலைக்கு விடுகின்றனர்.

மலையகப் பிள்ளைகளை தோட்டங்களிலிருந்து கூட்டிச் சென்று வீட்டு வேலைக்குச் சேர்த்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் புரோக்கர்கள் நகர்ப்புறங்களிலும் தோட்டப்புறங்களிலும் இருக்கின்றனர்.

இதுவும் மலையகப் பிள்ளைகள் கல்வி கற்காமல் வேலைக்காரர்களாகவும் அடிமைகளாகவும் தமது வாழ்க்கையைக் கழிக்க வழிவகுக்கின்றது. அது மட்டுமல்ல, பணக்கார வீடுகளில் கிடைக்கும் உணவு, உடைகள் மற்றும் பணத்தை தஞ்சமாக எண்ணிவரும் நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது.

மலையக சமுதாயம் தொடர்ந்தும் அடிமைகளாகவும், கல்வி அறிவு அற்றவர்களாகவும் வாழ வேண்டுமா? நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை நமது பிள்ளைகள் சமுதாயத்தில் ஓர் நல்ல பிரஜையாகவும் அந்தஸ்துள்ள மனிதர்களாகவும் உருவாக வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் எண்ண வேண்டும்.

இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது போல் சிறு வயதில் அவர்களுக்குரிய சிறந்த கல்வி வழியினை பெற்றோர் காண்பித்துவிட்டால் அவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
சீனாவில் பூகம்ப அனர்த்தம் 9 ஆயிரம் பேர் பலி; 10 ஆயிரம் பேர் காயம்
தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக ரணில், ஹக்கீம் வீதிப் போராட்டம்
பொலிஸ் அதிகாரம் புதிய கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்படுமா? பதிலளிக்காமல் அரசதரப்பு தவிர்ப்பு
தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது அரசாங்கம்
நானே முதலமைச்சர்;தட்டிப்பறிக்க பிள்ளையானுக்கு இடமளியேன்
மன்னார் மோதலில் 2 படையினர் பலி
விமல் வீரவன்ச தலைமையில் நாளை `தேசிய சுதந்திர முன்னணி' அங்குரார்ப்பணம்
கலாநிதி தேவநேசன் நேசையா தொடர்ந்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்
68 தமிழ் அரசியல்கைதிகள் வெலிக்கடை, மகசீன் சிறைகளிலிருந்து பூசாவுக்கு திடீர் இடமாற்றம்
ஒக்ஸ்போட் யூனியனில் இன்று ஜனாதிபதி உரை
பூசாவிற்கு தமிழ்க் கைதிகள் இடமாற்றம் தமிழ் கூட்டமைப்பு கடும் கண்டனம்
நுவரெலியா மாவட்டத்தில் 2 சனசமூக நிலையங்களை நிர்மாணிக்க நடவடிக்கை
தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே திருமலை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிப்பு
மூதூர் படுகொலை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது ஒசாமா குழு தொடர்பாகவும் நான் அறிந்திருக்கவில்லை
வத்துகாமம் புதுக்காட்டு பிரதேசத்தில் திடீர் தேடுதல்; எட்டு இளைஞர்கள் கைது
நீதி, சுதந்திரமான தேர்தலென கூறுவது கடினமான விடயம்
அரச சார்பற்ற நிறுவனத்தில் பணிபுரிந்த யாழ் .யுவதி வெள்ளை வானில் கடத்தல்
சுவிஸ் சிரேஷ்ட இராணுவ அதிகாரி குடாநாடு சென்று நிலைமைகளை ஆராய்வு
ஐ.ம.சு.மு. வென்றதையடுத்து பட்டாசு கொளுத்தி ஆரவாரம்
வவுனியா வைத்தியசாலை சுகாதாரசேவை சிற்றூழியர்கள் இருமணிநேரம் பகிஷ்கரிப்பு
வடக்கே தாதியர் பயிற்சிக்கு தெரிவானோர் 15 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும்
கொக்குவிலில் தனியார் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் நேற்றிரவு சுட்டுக்கொலை
மட்டு.நகரில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு சார்ஜன்ற் பலி; கான்ஸ்டபிள் படுகாயம்
கல்முனையில் அதாவுல்லா மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்
காட்டில் மரங்களை வெட்டி கடத்த முயன்ற இரு ஊர்காவல் படையினருக்கு 6 மாத சிறை
100 கிலோ கஞ்சாவை லொறிக் கூரையில் மறைத்து வைத்து கடத்திய இருவர் கைது
எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் பலி
தேர்தல் ஆணையாளரின் கூற்று அவரது சுயாதீன போக்குக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது
மாற்றுக் கருத்துகளை ஜீரணிக்க முடியாமலிருப்பதே எமது நாட்டின் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம்
திருமலை கரும்புலித் தாக்குதல் படகில் இயந்திர கட்டமைப்பை கட்டியமைத்தவர் `கடாபி'
கல்வித்துறையில் எட்டியுள்ள முன்னேற்றமே சமூகமொன்றின் வளர்ச்சிக்கான அளவுகோல்
வீட்டு வேலைக்கு பணத்துக்காக ஆட்திரட்டும் தரகர்களால் மலையக சிறார்களின் எதிர்காலம் மோசமாகப் பாதிப்பு
மண்சரிவு அபாயம்; துல்கல பகுதி மக்களை இடம்பெயருமாறு பிரதேச செயலர் அறிவுறுத்தல்
இளைஞர், யுவதிகளிடையே இன நல்லுறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு
சமாதானத்தை உருவாக்குவதற்கான பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது
சிக்குன் குன்யா பரவுவது அதிகரிக்கலாம் ராகமை நரம்பியல் பிரிவு எச்சரிக்கை
வடக்கு மக்களுக்கான சிறந்த நிர்வாகத்தை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம்
ராஜஸ்தானின் ஆதிக்கம் தொடர்கிறது சேவாக்கின் அணியையும் தோற்கடித்தது
சகல துறையிலும் ஜொலித்தார் கங்குலி கொல்கத்தா அணி 23 ஓட்டங்களால் வெற்றி
அறிவுசார் சமுதாயம் உருவாக வேண்டுமானால் அதிகம் வாசித்து அறிவுத் தேடல் பெற வேண்டும்
தீவுப்பகுதியின் முக்கிய வீதிகள் திருத்தப்படாததால் இன்னல்களை எதிர்நோக்கும் மக்கள்
வவுனியா - மதவாச்சி இணைப்பு ரயில் சேவை அடுத்த வாரம் முதல் நடைபெறவுள்ளது
யாழ்.மாவட்டத்தில் படையினரின் துண்டுப்பிரசுரம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com