Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தேர்தல் ஆணையாளரின் கூற்று அவரது சுயாதீன போக்குக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது
[13 - May - 2008] [Font Size - A - A - A]
* ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

எம்.ஏ.எம்.நிலாம்

எனது அரசியல் வாழ்க்கையில் 20 தேர்தல்களை எதிர்கொண்டிருக்கின்றேன். முதல்தடவையாக படுமோசமான அநீதியான மோசடி நிறைந்த தேர்தலாகவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலைச் சந்தித்தேன் எனத் தெரிவித்த ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தேர்தல் ஆணையாளர் சுயாதீனமாகச் செயற்பட்டு இத்தேர்தல் தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையாளரின் கூற்று அவரது சுயாதீனப் போக்குக்கு சவால் விடுப்பதாக அமைந்திருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெரஸ் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

நான் ஒரு கட்சியின் தலைவராகவும் அதற்கு முன்னர் செயலாளராகவும் இருந்து இதுவரையில் 20 தேர்தல்களை எதிர்கொண்டேன். முதற்தடவையாக முன்னொருபோதுமில்லாத விதத்தில் அடாவடித்தனமும் மோசடியும் அநீதியானதுமான தேர்தலாகவே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் காணப்பட்டது. தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் ஒரேவிதமாக அவற்றின் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றன. வன்முறைகளும் மோசடிகளும் அதிகம் இடம்பெற்றதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று மாவட்டங்களிலும் தங்களது அடாவடித்தனங்களை கட்டவிழ்த்து விட்டனர். வாக்களிப்பு நடப்பதற்கு 48 மணிநேரத்துக்கு முன்னர் வெளியூர்களிலிருந்தும் கொழும்பிலிருந்தும் காடையர்கள், குண்டர்கள் கிழக்கில் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு நிலைகளில் இவர்கள் முகாமிட்டிருந்தனர்.

வாக்களிப்பு ஆரம்பித்த சிலமணி நேரத்துக்குள் வாக்குப்பெட்டிகள் நிரப்பப்பட்டன. பொலிஸார் உட்பட பாதுகாப்புத் தரப்போ தேர்தல் அதிகாரிகளோ நீதியாகச் செயற்படவில்லை. பொலிஸ் நிலையங்களில் தொலைபேசிகள் கூட செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தன.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் படுமோசமான தேர்தலாகவே இதனைக்காண முடிந்தது. வாக்களிப்பு தினத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட மோசடிகளும் வன்முறைகளும் இடம்பெற்றதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், தேர்தல் ஆணையாளர் நியாயமான தேர்தல் நடந்ததாகக் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் மீதோ எதிர்காலத்தில் தேர்தல்கள் தொடர்பாகவோ நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்க முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி மோசடி மூலம் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் உண்மைகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப் படுத்தவிருக்கின்றோம்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் எதிர்காலத்தில் தேர்தல் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தேர்தலின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள். அதேசமயம், எதிர்காலத்தில் மேலும் மோசமான விளைவுகளை மக்கள் சந்திக்க வேண்டியேற்படலாம் எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் பூகம்ப அனர்த்தம் 9 ஆயிரம் பேர் பலி; 10 ஆயிரம் பேர் காயம்
தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக ரணில், ஹக்கீம் வீதிப் போராட்டம்
பொலிஸ் அதிகாரம் புதிய கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்படுமா? பதிலளிக்காமல் அரசதரப்பு தவிர்ப்பு
தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது அரசாங்கம்
நானே முதலமைச்சர்;தட்டிப்பறிக்க பிள்ளையானுக்கு இடமளியேன்
மன்னார் மோதலில் 2 படையினர் பலி
விமல் வீரவன்ச தலைமையில் நாளை `தேசிய சுதந்திர முன்னணி' அங்குரார்ப்பணம்
கலாநிதி தேவநேசன் நேசையா தொடர்ந்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்
68 தமிழ் அரசியல்கைதிகள் வெலிக்கடை, மகசீன் சிறைகளிலிருந்து பூசாவுக்கு திடீர் இடமாற்றம்
ஒக்ஸ்போட் யூனியனில் இன்று ஜனாதிபதி உரை
பூசாவிற்கு தமிழ்க் கைதிகள் இடமாற்றம் தமிழ் கூட்டமைப்பு கடும் கண்டனம்
நுவரெலியா மாவட்டத்தில் 2 சனசமூக நிலையங்களை நிர்மாணிக்க நடவடிக்கை
தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே திருமலை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிப்பு
மூதூர் படுகொலை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது ஒசாமா குழு தொடர்பாகவும் நான் அறிந்திருக்கவில்லை
வத்துகாமம் புதுக்காட்டு பிரதேசத்தில் திடீர் தேடுதல்; எட்டு இளைஞர்கள் கைது
நீதி, சுதந்திரமான தேர்தலென கூறுவது கடினமான விடயம்
அரச சார்பற்ற நிறுவனத்தில் பணிபுரிந்த யாழ் .யுவதி வெள்ளை வானில் கடத்தல்
சுவிஸ் சிரேஷ்ட இராணுவ அதிகாரி குடாநாடு சென்று நிலைமைகளை ஆராய்வு
ஐ.ம.சு.மு. வென்றதையடுத்து பட்டாசு கொளுத்தி ஆரவாரம்
வவுனியா வைத்தியசாலை சுகாதாரசேவை சிற்றூழியர்கள் இருமணிநேரம் பகிஷ்கரிப்பு
வடக்கே தாதியர் பயிற்சிக்கு தெரிவானோர் 15 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும்
கொக்குவிலில் தனியார் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் நேற்றிரவு சுட்டுக்கொலை
மட்டு.நகரில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு சார்ஜன்ற் பலி; கான்ஸ்டபிள் படுகாயம்
கல்முனையில் அதாவுல்லா மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்
காட்டில் மரங்களை வெட்டி கடத்த முயன்ற இரு ஊர்காவல் படையினருக்கு 6 மாத சிறை
100 கிலோ கஞ்சாவை லொறிக் கூரையில் மறைத்து வைத்து கடத்திய இருவர் கைது
எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் பலி
தேர்தல் ஆணையாளரின் கூற்று அவரது சுயாதீன போக்குக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது
மாற்றுக் கருத்துகளை ஜீரணிக்க முடியாமலிருப்பதே எமது நாட்டின் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம்
திருமலை கரும்புலித் தாக்குதல் படகில் இயந்திர கட்டமைப்பை கட்டியமைத்தவர் `கடாபி'
கல்வித்துறையில் எட்டியுள்ள முன்னேற்றமே சமூகமொன்றின் வளர்ச்சிக்கான அளவுகோல்
வீட்டு வேலைக்கு பணத்துக்காக ஆட்திரட்டும் தரகர்களால் மலையக சிறார்களின் எதிர்காலம் மோசமாகப் பாதிப்பு
மண்சரிவு அபாயம்; துல்கல பகுதி மக்களை இடம்பெயருமாறு பிரதேச செயலர் அறிவுறுத்தல்
இளைஞர், யுவதிகளிடையே இன நல்லுறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு
சமாதானத்தை உருவாக்குவதற்கான பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது
சிக்குன் குன்யா பரவுவது அதிகரிக்கலாம் ராகமை நரம்பியல் பிரிவு எச்சரிக்கை
வடக்கு மக்களுக்கான சிறந்த நிர்வாகத்தை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம்
ராஜஸ்தானின் ஆதிக்கம் தொடர்கிறது சேவாக்கின் அணியையும் தோற்கடித்தது
சகல துறையிலும் ஜொலித்தார் கங்குலி கொல்கத்தா அணி 23 ஓட்டங்களால் வெற்றி
அறிவுசார் சமுதாயம் உருவாக வேண்டுமானால் அதிகம் வாசித்து அறிவுத் தேடல் பெற வேண்டும்
தீவுப்பகுதியின் முக்கிய வீதிகள் திருத்தப்படாததால் இன்னல்களை எதிர்நோக்கும் மக்கள்
வவுனியா - மதவாச்சி இணைப்பு ரயில் சேவை அடுத்த வாரம் முதல் நடைபெறவுள்ளது
யாழ்.மாவட்டத்தில் படையினரின் துண்டுப்பிரசுரம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com