|
எலிக்காய்ச்சலால் இது வரை மூன்று பேர் மரணமடைந்துள்ளதாக இரத்தினபுரி சுகாதார சேவைகள் அத்தியட்சர் வைத்தியர் அதுல தங்கல்ல தெரிவித்தார்.
எம்பிலிப்பிட்டிய, எஹலியகொடை, தொடக்கவெல ஆகிய இடங்களிலேயே இவர்கள் இக்காய்ச்சலால் மரணமடைந்துள்ளனர். தொடக்கவெல கவுடுவாவ பகுதியைச் சேர்ந்த 68 வயதான கே.ஜயதிஸ்ஸ என்பவரே இறுதியாக மரணமடைந்தவராவார். இவர் ஒரு விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நோய்த்தாக்கத்தையடுத்து இரத்தினபுரி மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் நோய்த்தடுப்பு செய்ற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. |