100 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சாவை லொறிக் கூரையில் இரகசிய அறை அமைத்துக் கடத்திச் செல்ல முயற்சித்த இரண்டு சந்தேக நபர்களை இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
50 பொதிகளில் சூட்சுமமாக அடுக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட மேற்படி கஞ்சாத் தொகை ஹம்பேகமுவ காட்டுப்பகுதியிலிருந்து அரம்பேகமுவ என்ற இடத்திற்கும் அதன் பிறகு கொழும்புக்கும் கடத்திச் செல்லப்படுகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரத்தினபுரி பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்கள் இருவரும் துங்கம, பனாமுரே ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களெனவும் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.