வனபரிபாலன அதிகாரிகளைத் தாக்கியதுடன் காட்டில் சட்டவிரோதமாக மரங்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு ஊர்காவல் படை வீரர்களுக்கு வழக்கு விசாரணை முடிவில் குற்றவாளியாகக் கண்ட மொனறாகல நீதிவான் மகேஸ் வீரமன் ஆறு மாதகால சிறைத்தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார்.
2006 அக்டோபர் மாதம் இருவரும் இக்குற்றத்தைச் செய்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
அம்பாறை- மொனறாகல எல்லைப்பகுதி காட்டில் பெறுமதியான மரங்களை இவ்விரு ஊர்காவல்படையினரும் வெட்டிக்கடத்த முயன்றபோது வனபரிபாலன அதிகாரிகள் அவர்களைப் பிடித்துள்ளனர்.
அப்போது இரு ஊர்காவல்படையினரும் வனபரிபாலன அதிகாரிகளைத் தாக்கிவிட்டுத் தப்பியோடி விட்டனர் எனவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு மொனராகல நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது .
பாதுகாப்புக் கடமையில் இருந்த இருவரும் இக்குற்றத்தைச் செய்திருப்பதை நீதிவான் கண்டித்தார்.