யாழ்ப்பாணம் கொக்குவில் ஆடியபாதம் வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு தனியார் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொக்குவில் ஆடியபாதம் வீதியும் பிறவுண் வீதியும் சந்திக்கும் இடத்திற்கு அருகிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திலேயே நேற்றிரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் தொலைத் தொடர்பு நிலையத்தினுள் சென்று அதன் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் யாழ்.ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.
பரமநாதன் மகேந்திரன் (36 வயது) என்பவரே படுகொலை செய்யப்பட்டவராவார்.
பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.