வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து தாதியர் பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். எம்.மகேந்திரன் கேட்டுள்ளார்.
வவுனியா- மன்னார் வீதியில் புதிதாகக் கட்டப்பட்ட நிலையத்தில் பயிற்சிக் கல்லூரி 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வைபவரீதியாக திறந்து வைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
பயிற்சிக்கு மேற்படி நான்கு மாவட்டங்களிலிருந்தும் 106 தாதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். பயிற்சியின் பின்னர் இவர்கள் தத்தமது மாவட்டங்களிலேயே பணியாற்ற வேண்டுமென்பது நிபந்தனையாகவுள்ளது. எந்தவகையிலும் வேறுமாவட்டங்களுக்கு இடமாற்றம் கோர முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் சுகாதார அமைச்சரிடம் விடுத்த வேண்டு கோளுக்கு அமையவே தாதியர் பயிற்சிக் கல்லூரி வவுனியாவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இயங்குமென அதிகாரிகள் தெரிவித்தனர்.