வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவை சிற்றூழியர்கள் 160 பேர் நேற்று திங்கட்கிழமை காலை 10 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையிலான இரண்டு மணிநேர வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தமக்கு மேலதிக வேலைக்குரிய பணம் வழங்கப்படுவதில்லையென்றும் இதற்காகவே இந்த வேலைப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோம் என ஷ்ரீலங்கா சௌக்கிய சேவைகள் ஊழியர் சங்கத்தின் வவுனியாக் கிளைத்தலைவர் கறுப்பையா கண்ணன் தெரிவித்தார்.
232 தொழிலாளர்கள் கடமையாற்ற வேண்டிய இந்த வைத்தியசாலையில் 160 பேர் கடமையில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தொழிலாளர் ஒருவருக்கு மாதாந்தம் 1,500 ரூபா மட்டுமே மேலதிக கொடுப்பனவாக வழங்க வேண்டும் என தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் அத்தியட்சர் டாக்டர் பவானி பசுபதிராசா தெரிவித்தார்.
தொழிலாளர்களுடைய வேலை பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலையின் செயற்பாடுகளில் தடங்கல் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.