ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து மட்டக்களப்பு மாவட்டமெங்கும் பட்டாசு கொளுத்தி மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
தேர்தல் முடிவு வெளியாகி முடிந்ததும் அமைச்சர் எம்.எஸ். அமீர்அலி சகிதம் முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ். சுபைர், அலியார் ஸாலிஹ், ஜவாஹிர் ஸாலிஹ் ஆகியோர் வாகன பவனியாக காத்தான்குடி முகைதீன் மெத்தை ஜும்ஆ பள்ளிவாயலுக்கு விஜயம் செய்து தொழுகையிலும் விஷேட பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
பின்னர் ஊர்வலமாக ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களுக்கு சென்றனர். வழிநெடுகிலும் அவர்களை மக்கள் பட்டாசு கொளுத்தி, மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.
இதேவேளை, காத்தான்குடி பிரதேச மக்கள் என்றுமில்லாதவாறு பட்டாசுகளை கொளுத்தி எதிர்கால முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வே என்று ஊர்வலமாக ஆரவாரம் செய்தனர். பதுறிய்யா ஜும்ஆ பள்ளிவாயலுக்கும் சென்ற முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.