ஆள் அடையாளத்தை உறுதிசெய்யமுடியாத நிலையில் வீடுகளில் தங்கியிருப்பதற்கான காரணத்தையும் பொலிஸாருக்கு உரியவகையில் தெரிவிக்காத 8 இளைஞர்களை வத்துகாமம் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பாக வத்துகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார தெரிவிக்கையில்;
தங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து இராணுவத்தினரின் உதவியுடன் வத்துகாமம் புதுக்காட்டுப் பிரதேசத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இச் சோதனையின் போது 50 க்கும் அதிகமான வீடுகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இங்கு தேசிய அடையாளஅட்டைகள், ஆள் உறுதிக்கான ஆவணங்களுமின்றி தங்கியிருந்தமைக்கான உரிய காரணத்தை தெரிவிக்க தவறியதால் 8 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.