Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மூதூர் படுகொலை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது ஒசாமா குழு தொடர்பாகவும் நான் அறிந்திருக்கவில்லை
[13 - May - 2008] [Font Size - A - A - A]
* பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாட்சியம்

யோ. நிமல்ராஜ்

மூதூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் அக்ஷன் பாம் ஊழியர்கள் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாதென ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

மூதூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் அக்ஷன்பாம் நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இங்கு தொடர்ந்து நான்காவது நாளாக சாட்சியமளித்து மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவிக்கையில்;

" மூதூரிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளில் ஊர்காவல் படை வீரர்களும் கடமையில் இருந்தனர்.

அதன்படி மூதூர் பொலிஸ் நிலையத்தில் 45 பேரும் இறங்குதுறை சி சோதனைச் சாவடியில் 50 பேரும் 58 ஆம் இலக்கச் சோதனைச் சாவடியில் 15 பேரும் தோப்பூர் சோதனைச் சாவடியில் 30 பேரும் சாந்திநகர் சோதனைச் சாவடியில் 15 பேரும் பச்சனூர் சோதனைச் சாவடியில் ஏழுபேரும் நகரச் சோதனைச் சாவடியில் ஒன்பது பேரும் ரெலிகொம் சோதனைச் சாவடியில் ஐந்து பேரும் கடமையில் இருந்தனர்.

நகரத்திலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு சரச்சந்திரவே பொறுப்பதிகாரி ஆவார்.

சரச்சந்திர தான் ஆகஸ்ட் முதலாம் திகதி நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக என்னுடன் கதைத்தார். வேறு எவரும் அது தொடர்பாக என்னுடன் கதைக்கவில்லை.

அத்துடன், காதர் என்ற ஊர்காவல் படை வீரரும் இத்தாக்குதல் தொடர்பாக என்னுடன் கதைத்திருக்கவில்லை.

மூதூர் நகரை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்பதற்காக திருகோணமலையிலிருந்து கொமாண்டோ இராணுவப் படையினர் எமது பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்தனர்.

அவர்கள் நான்காம் திகதி காலை மோதல்களுக்காக புறப்பட்டுச் சென்ற போதும் ஊர்காவல் படைவீரரை அவர்களுடன் செல்லுமாறும் நான் உத்தரவிடவில்லை.

அதேபோல, இறங்குதுறைப் பக்கம் செல்லுமாறும் ஊர்காவல் படை வீரர்களுக்கு நான் உத்தரவிடவில்லை.

மோட்டோ றோலோ தொலைத் தொடர்பு சாதனம் மூலம் தான் எமது பொலிஸ் நிலையத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்வோம்.

ஆனால், 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதியன்று குறிப்பிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் செயலிழந்திருந்தன.

திரும்ப ஆகஸ்ட் ஐந்தாம் திகதி தான் அத்தொலைத் தொடர்பு சாதனங்கள் செயற்பட ஆரம்பித்தன.

பொலிஸ் சார்ஜன்ட் காமினியும் மோட்டோறோலோ தொலைத்தொடர்பு சாதனத்தை தன் வசம் வைத்திருந்தார்.

மூன்றாம் திகதி ஆகஸ்டில் நடைபெற்ற தாக்குதலில் நான்கு ஊர்காவல் படை வீரர்கள் இறந்திருந்தனர்.

எமது பொலிஸ் நிலையத்தில் 156 ஊர்காவல் படைவீரர்களும் 223 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

ஊர்காவல் படை வீரர்களிற்கு இரண்டு வாரகால இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு ஆயுதம் வழங்கப்படும்.

ஊர்காவல் படை வீரர்கள் மூதூர் மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்தே கடமைக்கு வருவர்.

ஒசாமா குழு பற்றி எதுவிதமான தகவல்களும் எனக்குத் தெரியாது. அவர்களைப் பற்றி நான் கேள்விப்படவும் இல்லை.

ஆனால், நான் சம்மாந்துறையில் இருந்த போது ஜிகாத் குழுபற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் மூதூர் பகுதியில் நடந்த தாக்குதலில் ஊர்காவல் படை வீரர்களின் வீடுகள் சேதமடைந்ததுடன் அவர்களின் உறவினர்களும் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையிலும் அவ்வுறவினர்களைச் சென்று பார்வையிட வேண்டுமென எமது பொலிஸ் நிலையத்திலிருந்த ஊர்காவல் படை வீரர்கள் கேட்டிருந்தும் நான் அதற்கு அனுமதியளிக்கவில்லையென சட்டத்தரணி எஸ். இரட்ணவேலின் குறுக்கு விசாரணைகளுக்கு பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், குறிப்பிட்ட சாட்சியை குறுக்கு விசாரணை செய்த இராணுவத் தரப்புச் சட்டத்தரணி கோமின் தயாசிறி கண்டி தலதா மாளிகை, மத்திய வங்கி, ஹெப்பிட்டிகொலாவ, அம்பாறை போன்ற குண்டுத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை உங்களுக்குத் தெரியுமாவெனக் கேட்ட போது சாட்சி தெரியுமெனப் பதிலளித்தார்.

இந்நிலையில் நேற்றைய இவரின் சாட்சியம் நிறைவு பெற்றது. மீண்டும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பார்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் பூகம்ப அனர்த்தம் 9 ஆயிரம் பேர் பலி; 10 ஆயிரம் பேர் காயம்
தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக ரணில், ஹக்கீம் வீதிப் போராட்டம்
பொலிஸ் அதிகாரம் புதிய கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்படுமா? பதிலளிக்காமல் அரசதரப்பு தவிர்ப்பு
தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது அரசாங்கம்
நானே முதலமைச்சர்;தட்டிப்பறிக்க பிள்ளையானுக்கு இடமளியேன்
மன்னார் மோதலில் 2 படையினர் பலி
விமல் வீரவன்ச தலைமையில் நாளை `தேசிய சுதந்திர முன்னணி' அங்குரார்ப்பணம்
கலாநிதி தேவநேசன் நேசையா தொடர்ந்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்
68 தமிழ் அரசியல்கைதிகள் வெலிக்கடை, மகசீன் சிறைகளிலிருந்து பூசாவுக்கு திடீர் இடமாற்றம்
ஒக்ஸ்போட் யூனியனில் இன்று ஜனாதிபதி உரை
பூசாவிற்கு தமிழ்க் கைதிகள் இடமாற்றம் தமிழ் கூட்டமைப்பு கடும் கண்டனம்
நுவரெலியா மாவட்டத்தில் 2 சனசமூக நிலையங்களை நிர்மாணிக்க நடவடிக்கை
தற்கொலைக் குண்டுத் தாக்குதலாலேயே திருமலை துறைமுகத்தில் கப்பல் மூழ்கடிப்பு
மூதூர் படுகொலை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது ஒசாமா குழு தொடர்பாகவும் நான் அறிந்திருக்கவில்லை
வத்துகாமம் புதுக்காட்டு பிரதேசத்தில் திடீர் தேடுதல்; எட்டு இளைஞர்கள் கைது
நீதி, சுதந்திரமான தேர்தலென கூறுவது கடினமான விடயம்
அரச சார்பற்ற நிறுவனத்தில் பணிபுரிந்த யாழ் .யுவதி வெள்ளை வானில் கடத்தல்
சுவிஸ் சிரேஷ்ட இராணுவ அதிகாரி குடாநாடு சென்று நிலைமைகளை ஆராய்வு
ஐ.ம.சு.மு. வென்றதையடுத்து பட்டாசு கொளுத்தி ஆரவாரம்
வவுனியா வைத்தியசாலை சுகாதாரசேவை சிற்றூழியர்கள் இருமணிநேரம் பகிஷ்கரிப்பு
வடக்கே தாதியர் பயிற்சிக்கு தெரிவானோர் 15 ஆம் திகதிக்கு முன் பதிவு செய்ய வேண்டும்
கொக்குவிலில் தனியார் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் நேற்றிரவு சுட்டுக்கொலை
மட்டு.நகரில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு சார்ஜன்ற் பலி; கான்ஸ்டபிள் படுகாயம்
கல்முனையில் அதாவுல்லா மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்
காட்டில் மரங்களை வெட்டி கடத்த முயன்ற இரு ஊர்காவல் படையினருக்கு 6 மாத சிறை
100 கிலோ கஞ்சாவை லொறிக் கூரையில் மறைத்து வைத்து கடத்திய இருவர் கைது
எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் பலி
தேர்தல் ஆணையாளரின் கூற்று அவரது சுயாதீன போக்குக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது
மாற்றுக் கருத்துகளை ஜீரணிக்க முடியாமலிருப்பதே எமது நாட்டின் அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம்
திருமலை கரும்புலித் தாக்குதல் படகில் இயந்திர கட்டமைப்பை கட்டியமைத்தவர் `கடாபி'
கல்வித்துறையில் எட்டியுள்ள முன்னேற்றமே சமூகமொன்றின் வளர்ச்சிக்கான அளவுகோல்
வீட்டு வேலைக்கு பணத்துக்காக ஆட்திரட்டும் தரகர்களால் மலையக சிறார்களின் எதிர்காலம் மோசமாகப் பாதிப்பு
மண்சரிவு அபாயம்; துல்கல பகுதி மக்களை இடம்பெயருமாறு பிரதேச செயலர் அறிவுறுத்தல்
இளைஞர், யுவதிகளிடையே இன நல்லுறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்
சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு
சமாதானத்தை உருவாக்குவதற்கான பாரிய பொறுப்பு ஊடகவியலாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது
சிக்குன் குன்யா பரவுவது அதிகரிக்கலாம் ராகமை நரம்பியல் பிரிவு எச்சரிக்கை
வடக்கு மக்களுக்கான சிறந்த நிர்வாகத்தை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம்
ராஜஸ்தானின் ஆதிக்கம் தொடர்கிறது சேவாக்கின் அணியையும் தோற்கடித்தது
சகல துறையிலும் ஜொலித்தார் கங்குலி கொல்கத்தா அணி 23 ஓட்டங்களால் வெற்றி
அறிவுசார் சமுதாயம் உருவாக வேண்டுமானால் அதிகம் வாசித்து அறிவுத் தேடல் பெற வேண்டும்
தீவுப்பகுதியின் முக்கிய வீதிகள் திருத்தப்படாததால் இன்னல்களை எதிர்நோக்கும் மக்கள்
வவுனியா - மதவாச்சி இணைப்பு ரயில் சேவை அடுத்த வாரம் முதல் நடைபெறவுள்ளது
யாழ்.மாவட்டத்தில் படையினரின் துண்டுப்பிரசுரம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com