மன்னாரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோதல்களில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த மோதல்களில் புலிகள் தரப்பில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
பெரியமடு, பாலம்பிட்டி, பாலமோட்டை பகுதிகளிலேயே இந்த மோதல்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாலம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற இருவேறு தாக்குதல்களிலேயே இருபடையினர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களிலேயே புலிகள் தரப்பில் 11 பேர் கொல்லப்பட்டதாக படையினர் தெரிவித்துள்ளனர்.