சதாசிவம் சேவியர் (தீவகன்) எழுதிய `வாழ்க்கைக்கு அறிமுகமும் அனுபவமும் அவசியம்'. `சிந்தனைக் கதவைத் திறவுங்கள்' ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை கொழும்பு ஷ்ரீ கதிரேசன் கல்யாண மணிமண்டபத்தில் நடைபெற்றது. தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரும் வட கொழும்பு இந்து பரிபாலன சபைத் தலைவருமான எஸ்.பி.சாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கொழும்பு விவேகானந்த சபையின் செயலாளர் இராஜ.புவனேஸ்வரன் கருத்துரை வழங்குவதையும் வெளியிடப்பட்ட நூல்களின் முதற் பிரதிகளை செல்லையா மகேந்திரன் தெ.ஈஸ்வரனிடமிருந்து பெறுவதையும் நூலாசிரியர் தீவகனுடன் எஸ்.பி.சாமி, தெ.ஈஸ்வரன், ஆ.சிவனேசச் செல்வன் ஆகியோரையும் விழாவில் கலந்து கொண்ட பார்வையாளர்களில் ஒரு பகுதியினரையும் இங்கு காணலாம்.