ஐ.பி.எல். இறுதியாட்டம் நடைபெறும் மைதானம் மாற்றப்பட்டுள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி ஜூன் 1 ஆம் திகதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் இப்போட்டி தெற்கு மும்பையில் நவியில் உள்ள டி.வை. பாட்டில் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
வான்கடே மைதானத்தில் தங்கள் உபகரணங்களையும் வாகனங்களையும் நிறுத்துவதற்கு தொலைக்காட்சி செய்தி தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். மேலும், இங்கு 40 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அமர முடியும். ஆனால், டி.வை. பாட்டில் மைதானத்தில் 55 ஆயிரம் பேர் வரை அமரலாம்.