ஐ.பி.எல். தொடரில் முதல் ஹட்ரிக் சாதனை படைத்த சென்னை சுப்ப கிங்ஸ் அணி வீரர் பாலாஜிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
ஐ.பி.எல். தொடரில் யுவராஜ் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் தோனி தலைமையிலான சென்னை சுப்ப கிங்ஸ் இடையிலான பரபரப்பான போட்டி சென்னையில் நடந்தது. இதில் சென்னை அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சென்னை அணியை சேர்ந்த தமிழக வீரர் பாலாஜி, பஞ்சாப் அணியின் பதான், சாவ்லா, வி.ஆர்.வி. சிங் ஆகிய மூன்று பேரையும் அடுத்தடுத்து வீழ்த்தி `ஹட்ரிக்' சாதனை படைத்தார். ஐ.பி.எல். தொடரில் இதுவே முதல் `ஹட்ரிக்' சாதனையாகும்.
பாலாஜியின் சாதனையை பஞ்சாப் அணியின் கப்டன் யுவராஜ் மனதாரப் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்;
"பாலாஜி மீண்டும் போர்முக்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் சிறப்பாக பந்து வீசினார். இது இந்திய கிரிக்கெட்டுக்கே நல்ல விடயம். `ருவென்ரி - 20' போட்டிகளில் `ஹட்ரிக்' சாதனை நிகழ்த்துவது மிகவும் அபூர்வமான விடயமெனக் கூறினார்.
மற்றொரு தமிழக வீரரான பத்ரிநாத் கூறுகையில்;
"ருவென்ரி - 20" போட்டியில் ஒரு `ஹட்ரிக்' எடுப்பதை எப்போதாவது தான் பார்க்க முடியும். காயத்திலிருந்து மீண்டு வந்த அவருடைய கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது" என்றார்.