அவுஸ்திரேலிய அணியின் துணைத் தலைவர் மைக்கேல் கிளார்க் மேற்கிந்திய பயணத்திலிருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் சனிக்கிழமை பிரிஸ்பேர்னிலிருந்து மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்கிறது.
மைக்கேல் கிளார்க்கிற்கு பதிலாக பிராட் ஹொட்ஜ் சேர்க்கப்பட்டுள்ளதால், ஐ.பி.எல். இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடி வரும் ஹொட்ஜ் உடனடியாக நாடு திரும்பவேண்டியுள்ளது.
கிளார்க் வரும் வரை அணியின் துணைத் தலைவராக மைக் ஹஸி நியமிக்கப்பட்டுள்ளார்.