ஐரோப்பிய நாடொன்றுக்குச் செல்வதற்கான விசாவை எடுப்பதற்காக ஒரு பெண்மணி மன்னாரிலிருந்து கொழும்புக்கு வந்தார்.
அவர், அந்த நாட்டின் தூதரகத்திற்குச் சென்றபோது, விசா அலுவல்களைக் கவனிக்கும் முகவர் நிலையத்திற்குச் சென்று விசாரிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். எனவே, இவர் சம்பந்தப்பட்ட முகவர் நிலையத்துக்குச் சென்று விசாரித்த போது "விசா தயாராகவில்லை. அது தயாரானதும் நாம் அறிவிப்போம். அப்போது வந்து எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டனர்.
அந்தப் பெண்மணி மன்னாருக்குத் திரும்பிவிட்டு சில வாரங்களின் பின் மீண்டும் வந்து முகவர் நிலையத்தில் விசாவைப் பற்றி விசாரித்தார். "விசா வந்திருக்க வேண்டுமே. தயவுசெய்து பாருங்கள்" என்று வினயமாகக் கேட்டுக்கொண்டார். அதன்பின் அங்குள்ள அலுவலர் தேடுதல் போட்டு விசாக் கடிதத்தை கண்டுபிடித்து பெண்மணியிடம் கையளித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னரே விசா பொறிக்கப்பட்டுவிட்டதையும் மூன்று மாத விசா காலத்தில் இரு வாரங்கள் காலாவதியாகிவிட்டதையும் அறிந்து அவர் மிகவும் வேதனைப்பட்டார்.
கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையை அலுவலர்கள் என்ற அசிரத்தையாளர்கள் ஏற்படுத்திவிடுகிறார்களே!