Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
பங்களாதேஷ் படகு விபத்தில் 32 பேர் பலி
[14 - May - 2008] [Font Size - A - A - A]
டாக்கா: பங்களாதேஷின் வடக்குப் பகுதியில் வீசிய புயலின் போது படகொன்று கவிழ்ந்ததில் குறைந்தது 32 பேர் பலியாகியிருக்கலாமென அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

150 பயணிகளைக் காவிவந்த படகொன்றே தலைநகர் டாக்காவிலிருந்து 180 கி.மீ தொலைவிலுள்ள ஹொரவ் குறா ஆற்றில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

25 பயணிகள் நீந்திக் கரை சேர்ந்துள்ளதாகவும் ஏனையோர் படகில் அகப்பட்டிருக்கலாமென கருதப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அளவுக்கதிகமான மக்களை ஏற்றுவது, நீண்டகாலப் பாவனை மற்றும் பாதுகாப்பற்ற தன்மை என்பவற்றினால் பங்களாதேஷில் அடிக்கடி படகு விபத்துகள் இடம்பெறுவது வழக்கமாகும்.

இவ் விபத்தின் பின்னர் படகிலிருந்த 50 பேர் காணாமல் போயிருப்பதாக தெரிவித்துள்ள உள்ளூர் அதிகாரியொருவர் இதில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற படகு விபத்தில் 39 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
பாகிஸ்தான் அரசாங்கத்திலிருந்து நவாஸ் ஷெரீப் கட்சி வெளியேற்றம்
கடும் மழையால் சீனாவில் மீட்பு முயற்சிகள் தாமதம்
பங்களாதேஷ் படகு விபத்தில் 32 பேர் பலி
லெபனான் இராணுவத்தை பலப்படுத்துவதற்கான உதவிகளை வழங்க அமெரிக்கா தயார்
சூடானுடனான தனது எல்லையை சாட் மூடியது பொருளாதார உறவுகளும் இடைநிறுத்தம்
மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா.கடும் அதிருப்தி
கிறிஸ்தவ சனத்தொகை வீதம் வீழ்ச்சியடைவதை தடுக்குமாறு பாப்பரசர் இஸ்ரேலிடம் கோரிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com