Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பிரதேசசபை உறுப்பினரை இடைநிறுத்த மாகாணசபை உறுப்பினருக்கு அதிகாரம் இல்லை
[14 - May - 2008] [Font Size - A - A - A]
* பசறை பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன்

பசறை பிரதேச சபையின் உபதலைவரைப் பதவியிலிருந்து இடைநிறுத்த அல்லது மாற்றக்கூடிய அதிகாரம் ஊவா மாகாணசபை உறுப்பினருக்கு இல்லை. அந்த அதிகாரம் பிரதேசசபை உறுப்பினர்களுக்கும் கட்சிக்கும் மாத்திரமே இருக்கின்றது. இவ்வாறு பசறை பிரதேசசபை உறுப்பினர் செல்லையா பத்மநாதன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பசறை பிரதேசசபையின் உபதலைவருடைய காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்; பசறை பிரதேசசபையின் உபதலைவர் டி.எம்.பிரேமதாஸ சாந்தவை பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு மாகாணசபை உறுப்பினரொருவர் ஊவா மாகாணசபையின் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ள செய்தியொன்றை பத்திரிகையில் பார்த்து தெரிந்துகொண்டேன்.

மேற்குறிப்பிட்ட மாகாணசபை உறுப்பினருடைய தனிப்பட்ட விடயத்திற்காக பிரதேசசபையின் உபதலைவரைப் பதவியிலிருந்து இடைநிறுத்தவோ அல்லது விலக்கவோ முடியாது. அந்த அதிகாரம் இவருக்குக் கிடையாது. இவை பிரதேசசபைக்கும், உறுப்பினர்களுக்கும் தொடர்புடைய விடயமாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

உபதலைவர் டி.எம்.பிரமேதாஸ சாந்த இனபேதமின்றி பொதுநோக்குடன் சேவையாற்றக்கூடிய ஒருவர் என்பதை எவருமே மறுக்க மாட்டார்கள். தோட்டப் பகுதி மக்கள் இவருடைய சேவையைப் பெற்று பயனடைகின்றனர்.

Email this page Your Opinion Print this page
புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுக்க இலங்கை இந்தியா ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பாடு
ஹிஸ்புல்லா முதலமைச்சராகாவிடின் 12 முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா
ரணில், ஹக்கீமுடன் கிழக்கு தேர்தல் தொடர்பாக மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் ஆராய்வு
வட பகுதி மோதல்களில் 8 படையினர் காயம்
மாத்தளை முத்துமாரியம்மன் அறங்காவலர் மாரிமுத்து செட்டியார் காலமானார்
முதலமைச்சர் பதவியை தமிழர், முஸ்லிம்கள் சுழற்சி முறையில் பங்கிடுமாறு யோசனை
கிழக்கு மாகாணத்திற்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்கினால் தீவிரமாக எதிர்ப்போம்
வாழைச்சேனை பகுதியில் கைக்குண்டு வெடித்து இளைஞன் பலி; 11 பேர் காயம்
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தினூடாக பரிகாரம் காணுமாறு தெரிவிப்பு
மணலாறில் 600 வீடுகளில் பதுங்குகுழிகளை அமைக்க முடிவு
`பொதுநலவாய அமைப்பில் பாகிஸ்தானை மீண்டும் இணைப்பதற்கு இலங்கை பெரும் பங்காற்றியது'
அரசு எந்த வகையிலும் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு தயாரில்லையென்கிறார் பிரதமர்
கிழக்கு தேர்தல் தொடர்பாக அமெரிக்கா கவலை இலங்கை அரசிடமும் அதனைத் தெரிவிக்கும்
நடத்துநர் தாக்கியதால் ஊனமுற்ற பயணி மரணம்
கொலைக் குற்றத்திற்காக நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் மரணதண்டனை
பிள்ளையான், ஹிஸ்புல்லா முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்கள் என்கிறார் ஹக்கீம்
கொழும்பில் நகைக்கடை வர்த்தகரை கடத்தி ரூபா 10 இலட்சம் கப்பம் கோரிய 2 பொலிஸார்
`விமானப்படை, கடற்படை மீதான தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர் லெப்.கேணல் வைகுந்தன்'
காவத்தை தோட்ட, கிராமப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சலினால் 250 பேர் பாதிப்பு
கம்பராவ காட்டுப்பகுதியில் ஆணின் எலும்புக்கூடு மீட்பு
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாடசாலை செல்லாத வலது குறைந்த பிள்ளைகளின் விபரம் சேகரிப்பு
கிழக்கிற்கு தமிழரையே முதலமைச்சராக நியமிக்க ஜனாதிபதியிடம் சித்தார்த்தன் கோரிக்கை
கிழக்கில் பெருமளவான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் நானே முதலமைச்சராவேன்
புறக்கோட்டை வர்த்தகர்களிடம் 50 கோடி ரூபாவரை கப்பம் பெற்ற முக்கிய நபர் பொலிஸாரால் கைது
வற்புறுத்தலின் பேரில் திருச்சொரூபம் மடுவிலிருந்து எடுத்துச் செல்லப்படவில்லை
சவூதி ரெலிக்கொம்மில் பெற்ற அனுபவத்தை ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மிலும் பிரயோகிக்க முடியும்
முல்லைத்தீவை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தல்
சிறுபான்மையினரை கட்டாய கருத்தடைக்கு வற்புறுத்தும் தியத்தலாவ வைத்தியசாலை அதிகாரிகள்
பிரதேசசபை உறுப்பினரை இடைநிறுத்த மாகாணசபை உறுப்பினருக்கு அதிகாரம் இல்லை
பாராளுமன்ற செயற்பாடுகளை இனிமேல் மும்மொழிகளிலும் இணையத்தளத்தில் பார்க்கலாம்
வலிமையுடைய பத்திரிகையாளர்களால் ஆட்சியையே மாற்றக்கூடிய சக்தி உள்ளது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com