Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கில் பெருமளவான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் நானே முதலமைச்சராவேன்
[14 - May - 2008] [Font Size - A - A - A]
*உறுதிபடக்கூறுகிறார் ஹிஸ்புல்லாஹ்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மட்டக்களப்பு மாவட்டத்தில் அமோக வெற்றியை ஈட்டியுள்ள அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அதிக முஸ்லிம் உறுப்பினர்களையும் பெற்றுள்ளதால் அரசாங்கம் அளித்த உறுதியின் பிரகாரம் நானே முதலமைச்சராக தெரிவாவேன் என்று மாகாண சபைக்குத் தெரிவான முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பள்ளிவாசலுக்கு முதன்முதலாக வருகைதந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அங்கு திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் நன்றி தெரிவித்து உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் ஹிஸ்புல்லாஹ் தமதுரையில், பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் அனைத்து காத்தான்குடி பிரதேச மக்கள் இரவு பகலாக பல்வேறு அசௌகரியங்கள் , இடர்கள் , தடைகளுக்கு மத்தியில் என்னைத் தெரிவு செய்துள்ளீர்கள் . முதலமைச்சர் பகற்கனவு என்று கூறியவர்களுக்கு இன்று நனவாக்க வழிசமைத்துள்ளீர்கள். அல்லாஹ் நீங்கள் நான் எண்ணியதை நனவாக்கியுள்ளான்.

இப்பதவி மூலம் தமிழ்- முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை புதிய பரிமாணத்துடன் கட்டியெழுப்ப நான் திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.

எமது தமிழ்- முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க ஒருபோதும் இடமளியேன். தமிழ் மக்களுக்கு நான் அமைச்சராக இருந்தபோது பல்வேறு அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டுள்ளேன். அவ்வாறே தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் கோரிக்கைகளை நியாயமான முறையில் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

முஸ்லிம்களாகிய நீங்களும் தமிழ் மக்களோடு எவ்வாறு இப்போது பரஸ்பரத்துடன் உறவாடுகின்றீர்களோ அதை மேலும் வலுவூட்ட வேண்டும்.

ஜனாதிபதி சொன்னதை செய்பவர். செய்வதைச் சொல்பவர். ஆகவே பெரும்பாலான ஆசனத்தைப் பெற்றுள்ள எனக்கு முதலமைச்சர் பதவியை இன்னும் ஓரிரு தினங்களில் கையளிப்பார் என்று எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு. இதைப்பற்றி அலட்ட வேண்டிய அவசியமில்லை.

எமது மாற்றுக்கட்சி சகோதரர்களும் எமது சகோதரர்களே . ஆகவே, அவர்கள் எமக்கு எதிரானவர்கள் என்று அவர்களுக்கோ அல்லது அவர்களின் உடைமைகளுக்கோ எவ்விதமான தீங்குகளையும் செய்யாது அவர்களையும் அரவணைத்துச் செல்லுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுக்க இலங்கை இந்தியா ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பாடு
ஹிஸ்புல்லா முதலமைச்சராகாவிடின் 12 முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா
ரணில், ஹக்கீமுடன் கிழக்கு தேர்தல் தொடர்பாக மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் ஆராய்வு
வட பகுதி மோதல்களில் 8 படையினர் காயம்
மாத்தளை முத்துமாரியம்மன் அறங்காவலர் மாரிமுத்து செட்டியார் காலமானார்
முதலமைச்சர் பதவியை தமிழர், முஸ்லிம்கள் சுழற்சி முறையில் பங்கிடுமாறு யோசனை
கிழக்கு மாகாணத்திற்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்கினால் தீவிரமாக எதிர்ப்போம்
வாழைச்சேனை பகுதியில் கைக்குண்டு வெடித்து இளைஞன் பலி; 11 பேர் காயம்
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தினூடாக பரிகாரம் காணுமாறு தெரிவிப்பு
மணலாறில் 600 வீடுகளில் பதுங்குகுழிகளை அமைக்க முடிவு
`பொதுநலவாய அமைப்பில் பாகிஸ்தானை மீண்டும் இணைப்பதற்கு இலங்கை பெரும் பங்காற்றியது'
அரசு எந்த வகையிலும் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு தயாரில்லையென்கிறார் பிரதமர்
கிழக்கு தேர்தல் தொடர்பாக அமெரிக்கா கவலை இலங்கை அரசிடமும் அதனைத் தெரிவிக்கும்
நடத்துநர் தாக்கியதால் ஊனமுற்ற பயணி மரணம்
கொலைக் குற்றத்திற்காக நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் மரணதண்டனை
பிள்ளையான், ஹிஸ்புல்லா முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்கள் என்கிறார் ஹக்கீம்
கொழும்பில் நகைக்கடை வர்த்தகரை கடத்தி ரூபா 10 இலட்சம் கப்பம் கோரிய 2 பொலிஸார்
`விமானப்படை, கடற்படை மீதான தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர் லெப்.கேணல் வைகுந்தன்'
காவத்தை தோட்ட, கிராமப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சலினால் 250 பேர் பாதிப்பு
கம்பராவ காட்டுப்பகுதியில் ஆணின் எலும்புக்கூடு மீட்பு
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாடசாலை செல்லாத வலது குறைந்த பிள்ளைகளின் விபரம் சேகரிப்பு
கிழக்கிற்கு தமிழரையே முதலமைச்சராக நியமிக்க ஜனாதிபதியிடம் சித்தார்த்தன் கோரிக்கை
கிழக்கில் பெருமளவான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் நானே முதலமைச்சராவேன்
புறக்கோட்டை வர்த்தகர்களிடம் 50 கோடி ரூபாவரை கப்பம் பெற்ற முக்கிய நபர் பொலிஸாரால் கைது
வற்புறுத்தலின் பேரில் திருச்சொரூபம் மடுவிலிருந்து எடுத்துச் செல்லப்படவில்லை
சவூதி ரெலிக்கொம்மில் பெற்ற அனுபவத்தை ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மிலும் பிரயோகிக்க முடியும்
முல்லைத்தீவை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தல்
சிறுபான்மையினரை கட்டாய கருத்தடைக்கு வற்புறுத்தும் தியத்தலாவ வைத்தியசாலை அதிகாரிகள்
பிரதேசசபை உறுப்பினரை இடைநிறுத்த மாகாணசபை உறுப்பினருக்கு அதிகாரம் இல்லை
பாராளுமன்ற செயற்பாடுகளை இனிமேல் மும்மொழிகளிலும் இணையத்தளத்தில் பார்க்கலாம்
வலிமையுடைய பத்திரிகையாளர்களால் ஆட்சியையே மாற்றக்கூடிய சக்தி உள்ளது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com