|
சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் பாடசாலை செல்லாத வலது குறைந்த பிள்ளைகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
பாடசாலை செல்ல முடியாத பிள்ளைகளின் அங்கவீனத் தன்மை, பாடசாலை செல்ல முடியாமைக்கான காரணங்கள், பாடசாலைக்குச் செல்வதற்கு தேவையான உபகரணங்கள், பெற்றோரின் வருமான நிலைமை, பிள்ளைகளை எவ்வாறு கல்வியில் ஈடுபட வைத்தல் போன்ற தகவல்கள் நிந்தவூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் மூலமாக திரட்டப்படுவதாக சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். |