நோர்வூட் தேயிலைத் தோட்டத்தில் வெளியார் சட்ட விரோதமாக மாணிக்கக் கற்கள் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து நோர்வூட் தோட்டத் தொழிலாளர்களில் சிலர் நேற்று செவ்வாய்க்கிழமை நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
நோர்வூட் தோட்ட என்ஸி தேயிலை மலைப்பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிலரை தோட்ட காவலாளி நேற்று முன்தினம் திங்கட்கிழமை நோர்வூட் பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.
இதன் பின்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலைமையில், நோர்வூட் தோட்ட காவலாளியை நேற்று முன்தினம் இரவு ஒரு சிலர் அச்சுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே சட்ட விரோதமாக மாணிக்கக் கல் அகழ்வுக்கு எதிராக பாரபட்சமற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.