நாவல கம்பராவ காட்டுப் பகுதியிலிருந்து ஆணின் எலும்புக்கூடொன்றை நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாவல பொலிஸார் மீட்டுள்ளனர்.
கிராம வாசிகள் நாவல பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட எலும்புக்கூடு இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.