*கைது செய்யப்பட்டு விசாரணை
கொழும்பு நகரில் நகைக்கடை வர்த்தகர் ஒருவரைக் கடத்தி பத்துலட்சம் ரூபாவை கப்பமாகக் கோரியதாகக் கூறி இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு புறக்கோட்டையிலுள்ள மேற்படி தமிழ் வர்த்தகரது நகைக்கடைக்கு, கடமை நேரத்தில் சிவிலுடையில் சென்ற இவ்விரு பொலிஸாரும் நகைக்கடை உரிமையாளரிடம், தங்களை பொலிஸ்காரர்களென அறிமுகப்படுத்தி அவரை அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர்.
அவரிடம் பத்து இலட்சம் ரூபா கோரிய போதும் அவர் நான்கு இலட்சம் ரூபாவை அவர்களுக்கு கொடுத்துள்ளார்.
வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இந்த வர்த்தகர் வழங்கிய தகவலையடுத்து மேற்படி இரு பொலிஸாரையும் புறக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.