Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அரசு எந்த வகையிலும் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு தயாரில்லையென்கிறார் பிரதமர்
[14 - May - 2008] [Font Size - A - A - A]
அரசு எந்த வகையிலும் போர் நிறுத்தத்திற்கு தயாரில்லையென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்த படையினரின் தாய் மாருக்கு நிதி உதவி வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வீரத்தாய்மாரைப் பாதுகாப்போம் என்ற திட்டத்தின் 2ஆம் கட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந் நிகழ்விலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;

தங்களுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அழுத்தம் கொடுத்து யுத்தநிறுத்த உடன்பாட்டுக்கு வர விடுதலைப் புலிகள் முயன்றுள்ளதை வரலாறு சான்று பகர்கிறது.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி இப்பிரச்சனையை வேறொரு கோணத்தில் பார்க்கிறார். பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கும் தூரம் வெகு தூரத்திலில்லை. இதனால் படையினரை தனிமைப்படுத்தி விடாது அவர்களுக்கு வலுவூட்ட மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

புலிகள் விடயத்தில் அரசு தெளிவான தீர்மானமொன்றிலுள்ளது. என்ன நடந்தாலும் போர் நிறுத்த உடன்பாடொன்று எதிர்காலத்தில் கைச்சாத்திடப்படாதென்ற நிலைப்பாடே அதுவாகும். அதற்கு இடமளிக்கமுடியாது.

சிலவாரங்களுக்கு முன் ஒரு விடயத்தைக் கூறினேன். `அவர்குழிக்குள்' இருக்கிறார். அவர் குழிக்குள் இருப்பதாகக் கூறினேன். அந்தக் குழியை படையினர் மூடுவது வெகு தொலைவில் இல்லை. குழியின் நுனியிலிருந்தவர் தற்போது உள்ளே சென்றுவிட்டார்.

இன்று உலகில் தொழில் நுட்பம் அபி விருத்தியடைந்து விட்டது. மக்கள் வாழும் பிரதேசத்தில் பொது மக்களுக்கு சேதமேற்படாத வகையில் தேவையான இலக்கை நோக்கி தாக்குதல்களை நடத்தக் கூடிய குண்டுகள் தயாரிக்கப்பட்டு விட்டன. அந்தத் தொழில் நுட்பத்தை உயர் மட்டத்தில் அரசு பயன்படுத்துகிறது.

எங்கிருந்தாலும் தேடிவருவோம். இராணுவத்திற்கு நேரம் மட்டுமே தேவை. அப்பாவி மக்களைப் பலி கொள்ளும் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

சிறுவர்கள், தேரர்கள் அழிக்கப்படும் அத்தியாயம் முடிக்கப்பட வேண்டுமென்றார்.

Email this page Your Opinion Print this page
புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுக்க இலங்கை இந்தியா ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பாடு
ஹிஸ்புல்லா முதலமைச்சராகாவிடின் 12 முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா
ரணில், ஹக்கீமுடன் கிழக்கு தேர்தல் தொடர்பாக மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகள் ஆராய்வு
வட பகுதி மோதல்களில் 8 படையினர் காயம்
மாத்தளை முத்துமாரியம்மன் அறங்காவலர் மாரிமுத்து செட்டியார் காலமானார்
முதலமைச்சர் பதவியை தமிழர், முஸ்லிம்கள் சுழற்சி முறையில் பங்கிடுமாறு யோசனை
கிழக்கு மாகாணத்திற்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்கினால் தீவிரமாக எதிர்ப்போம்
வாழைச்சேனை பகுதியில் கைக்குண்டு வெடித்து இளைஞன் பலி; 11 பேர் காயம்
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தினூடாக பரிகாரம் காணுமாறு தெரிவிப்பு
மணலாறில் 600 வீடுகளில் பதுங்குகுழிகளை அமைக்க முடிவு
`பொதுநலவாய அமைப்பில் பாகிஸ்தானை மீண்டும் இணைப்பதற்கு இலங்கை பெரும் பங்காற்றியது'
அரசு எந்த வகையிலும் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு தயாரில்லையென்கிறார் பிரதமர்
கிழக்கு தேர்தல் தொடர்பாக அமெரிக்கா கவலை இலங்கை அரசிடமும் அதனைத் தெரிவிக்கும்
நடத்துநர் தாக்கியதால் ஊனமுற்ற பயணி மரணம்
கொலைக் குற்றத்திற்காக நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் மரணதண்டனை
பிள்ளையான், ஹிஸ்புல்லா முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்கள் என்கிறார் ஹக்கீம்
கொழும்பில் நகைக்கடை வர்த்தகரை கடத்தி ரூபா 10 இலட்சம் கப்பம் கோரிய 2 பொலிஸார்
`விமானப்படை, கடற்படை மீதான தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர் லெப்.கேணல் வைகுந்தன்'
காவத்தை தோட்ட, கிராமப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சலினால் 250 பேர் பாதிப்பு
கம்பராவ காட்டுப்பகுதியில் ஆணின் எலும்புக்கூடு மீட்பு
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாடசாலை செல்லாத வலது குறைந்த பிள்ளைகளின் விபரம் சேகரிப்பு
கிழக்கிற்கு தமிழரையே முதலமைச்சராக நியமிக்க ஜனாதிபதியிடம் சித்தார்த்தன் கோரிக்கை
கிழக்கில் பெருமளவான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் நானே முதலமைச்சராவேன்
புறக்கோட்டை வர்த்தகர்களிடம் 50 கோடி ரூபாவரை கப்பம் பெற்ற முக்கிய நபர் பொலிஸாரால் கைது
வற்புறுத்தலின் பேரில் திருச்சொரூபம் மடுவிலிருந்து எடுத்துச் செல்லப்படவில்லை
சவூதி ரெலிக்கொம்மில் பெற்ற அனுபவத்தை ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மிலும் பிரயோகிக்க முடியும்
முல்லைத்தீவை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தல்
சிறுபான்மையினரை கட்டாய கருத்தடைக்கு வற்புறுத்தும் தியத்தலாவ வைத்தியசாலை அதிகாரிகள்
பிரதேசசபை உறுப்பினரை இடைநிறுத்த மாகாணசபை உறுப்பினருக்கு அதிகாரம் இல்லை
பாராளுமன்ற செயற்பாடுகளை இனிமேல் மும்மொழிகளிலும் இணையத்தளத்தில் பார்க்கலாம்
வலிமையுடைய பத்திரிகையாளர்களால் ஆட்சியையே மாற்றக்கூடிய சக்தி உள்ளது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com