மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபைத் தலைவர் கலாநிதி த.மாரிமுத்து செட்டியார் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு காலமானார்.
கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்படிருந்த நிலையிலேயே காலமானார்.
1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறந்த இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார். இவர் 30 வருடகாலமாகத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலராகப் பதவிவகித்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கையின் அதியுயர் இராஜ கோபுரமான 108 அடி இராஜகோபுரத்தை மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு அமைத்துக் கொடுத்த பெருமை அன்னாரையே சார்ந்ததாகும்.
ஆன்மீகப் பணிகளையும், சமய, சமூகப் பணிகளையும் மேற்கொண்டுவந்த இவர் ஐந்தாம்தர புலமைப் பரிசில் மாணவர்களுக்கான வகுப்புக்கள், தையல், கணினி பயிற்சி வகுப்புக்கள் அனைத்தையும் ஆலய அறங்காவலர் சபையின் ஆதரவுடன் நடத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.