வடக்கே நேற்று முன்தினம் திங்கட் கிழமை நடைபெற்ற மோதல்களில் எட்டுப் படையினர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த மோதல்களில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா, மன்னார், மணலாறு பகுதிகளில் நடைபெற்ற மோதல்களிலேயே இந்த இழப்புகள் ஏற்பட்டதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது.
மணலாறில் ஜனகபுர மற்றும் கிரிப்பன்வெவ பகுதியில் இடம்பெற்ற மோதலில் மூன்று படையினரும், வவுனியா பாலமோட்டை பகுதியிலும் கற்புலன் பகுதியிலும் தலா இரு படையினரும் சிறுநாவற்குளம் பகுதியில் இராணுவச்சிப்பாயொருவரும் படுகாயமடைந்துள்ளதாக படையினர் கூறுகின்றனர்.
இந்த மோதல்களிலேயே 15 புலிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.