இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 19 வயதுக்குட்பட்ட மாவட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான வடக்கு, கிழக்கு மாகாண கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த திங்கட்கிழமை மாத்தளை அலுவிகார மைதானத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை மாவட்ட அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மாவட்ட அணி 30 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.
தம்புள்ள சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவிருந்த இப்போட்டி தவிர்க்கமுடியாத காரணத்தால் மாத்தளைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.