இந்த வருடத்திற்கான 16 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கான தேசிய பற்மின்ரன் விளையாட்டுப் போட்டி பண்டாரவளையில் சாந்த தோமஸ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இலங்கையின் பற்மின்ரன் விளையாட்டு கழக சபையின் முன்னாள் தலைவர் அமரர் எஸ்.எல்.ஏ. ரத்நாயகவின் ஞாபகார்த்தமாக நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் நாட்டிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட பற்மின்ரன் வீரர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய சேமிப்பு வங்கியின் அனுசரணையோடு நடைபெற்ற இப் போட்டி ஏ. பிரிவு, பி. பிரிவு என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு நடைபெற்றது.
கொழும்பு ஆனந்த வித்தியாலயம் ஏ. பிரிவில் முதலாம் இடத்தினையும் இரண்டாம் இடத்தினை கண்டி சாந்த அந்தோனி வித்தியாலயமும் பெற்றுக் கொண்டன.
பி. பிரிவில் கொழும்பு ஷன்சே பாலிகா வித்தியாலயமும் இரண்டாம் இடத்தினை கொழும்பு யசோதரா பாலிகா வித்தியாலயமும் பெற்றுக் கொண்டன.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் உபாலி குணரத்னமும் அவரது பாரியாரும் கேடயமும் சான்றிதளும் வழங்கினார்கள்.