Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
தாமதமாகப் பந்து வீசிய கங்குலியின் அணிக்கு 40,000 ரூபா அபராதம்
[14 - May - 2008] [Font Size - A - A - A]
தாமதமாக பந்து வீசிய கங்குலியின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சார்பில் `ருவென்ரி- 20' தொடர் நடக்கிறது. ஐ.பி.எல். அமைப்பு, சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) விதிமுறைகளை பின்பற்றுகிறது. ஐ.சி.சி. விதிமுறைகளின்படி ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசினால் 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும். கடந்த 9 ஆம் திகதி கொல்கத்தாவில் நடந்த 29 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா, பெங்களூர் அணிகள் மோதின.

இதில் இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீச தவற, இரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத்தில் நடந்த 32 ஆவது லீக் போட்டியில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லட்சுமண் வழி நடத்தும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது.

இதில் குறிப்பிட்ட நேரத்துக்குள் கங்குலி அணி பந்துவீச தவறியது. இரண்டு ஓவர்களை வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் போட்டி நடுவர் தலாத் அலி, கொல்கத்தா அணிக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

Email this page Your Opinion Print this page
அரையிறுதி வாய்ப்பை இழந்த டிராவிட் அணி பஞ்சாப்புடனான போட்டியிலும் தோற்றது
சென்னை சுப்ப கிங்ஸுடனான இன்றைய போட்டியில் சச்சின்
மேற்கிந்திய வீரர் சாமுவேல்ஸுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிப்பு
தாமதமாகப் பந்து வீசிய கங்குலியின் அணிக்கு 40,000 ரூபா அபராதம்
`ருவென்ரி-20' இல் பெறும் வெற்றியானது டெஸ்ட் போட்டிக்கு ஒரு போதும் உதவாது
பண்டாரவளையில் தேசிய பமின்ரன் போட்டி
மட்டக்களப்பு அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com