கிரிக்கெட் போட்டியின்போது இரண்டு முறை இலஞ்சம் பெற்றது மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மேற்கிந்திய அணியின் வீரர் மார்லன் சாமுவேல்ஸுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரில் ஆதாரம் உள்ளதாக மேற்கிந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 21 ஆம் திகதி நாக்பூரில் இந்திய- மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியின்போது அணியின் திட்டங்கள் குறித்து இந்திய சூதாட்டக்காரர் முகேஜ் கோச்சருக்கு தகவல் தெரிவித்ததாக சாமுவேல் மீது புகார் எழுந்தது.
எனவே, அவர் மீதான புகார் நிரூபணம் ஆனதால் சர்வதேச போட்டிகளில் அவர் விளையாடுவதற்கு இரண்டு ஆண்டு காலம் தடை விதிக்கப்படுமென மேற்கிந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.