ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை காயம் காரணமாக விளையாடாத நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று சென்னை சுப்ப கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக களமிறங்குகிறார்.
தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், சனத் ஜெயசூர்யாவுடன் தொடக்க வீரராக களமிறங்குவேன் என்றும் டெண்டுல்கர் தெரிவித்தார்.
வான்கடே மைதானத்தில் 2 மணி நேர வலைப்பயிற்சி செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த சச்சின் இவ்வாறு கூறினார்.
மும்பை இந்தியன் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் 6 ஆம் இடத்திலுள்ளது.