Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
அரையிறுதி வாய்ப்பை இழந்த டிராவிட் அணி பஞ்சாப்புடனான போட்டியிலும் தோற்றது
[14 - May - 2008] [Font Size - A - A - A]
யுவராஜ் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சொந்த மண்ணில் சிறப்பான வெற்றி பெற்றது. மார்சின் அதிரடி அரைச்சதம் கைகொடுக்க, பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., `ருவென்ரி - 20' லீக் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நேற்று முன்தினம் மொகாலியில் நடந்த 34 ஆவது லீக் போட்டியில் டிராவிட் தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி, யுவராஜின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. நாணயச் சுழற்சியில் வென்ற டிராவிட் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. சர்வான், கோயல் நீக்கப்பட்டு லூக் போமர்ஸ் பேச், ஷ்ரீவஸ்தவா இடம்பிடித்தனர். பெங்களூர் அணியில் சந்தர்பால் இடத்தை மிஸ்பா பிடித்தார்.

பெங்களூர் அணிக்கு தொடக்க வீரர்களாக கோஹ்லி, அருண்குமார் வந்தனர். சிறப்பாக பந்து வீசிய ஷ்ரீசாந்த், பெங்களூர் வீரர்களை வேகத்தில் மிரட்டினார். இவரது பவுன்சரை எதிர்கொள்ள திணறிய அருண்குமார் (1), ஜெயவர்தனவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த மிஸ்பா ஆட்டத்தை அதிரடியாக ஆரம்பித்தார். ஷ்ரீசாந்த் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.பதானின் அடுத்த ஓவரில் கோஹ்லி வரிசையாக இரண்டு பவுண்டரி அடிக்க, ஓட்ட வேகம் அதிகரித்தது. தொடர்ந்து ஷ்ரீசாந்த் பந்தை வெளுத்து வாங்கிய மிஸ்பா, 5 ஆவது ஓவரின் முதல் பந்தில் இமாலய சிக்சர் அடித்து, ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினார்.

ஆனால், கடைசி பந்தில் `ஹிட் - விக்கெட்' முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர் 8 பந்தில் 121 ஓட்டங்கள் (ஒரு சிக்சர், 3 பவுண்டரி) எடுத்தார். இவரை தொடர்ந்து விராத் கோஹ்லியும் (21) வெளியேற, பெங்களூர் அணி திணறத் தொடங்கியது.

இக்கட்டான நிலையில் களமிறங்கிய டிராவிட், கமரூன் ஒயிட்டுடன் ஜோடி சேர்ந்தார். மிகவும் மந்தமாக விளையாடிய இந்த ஜோடி ஓட்டங்களை எடுக்க தடுமாறியது. பவுண்டரிகளை பார்ப்பது ரசிகர்களுக்கு அரிதாகிப் போனது. இந்நிலையில் அதிரடிக்கு மாற நினைத்த ஒயிட் (10), சாவ்லா பந்தில் அவரிடமே பிடிகொடுத்து வெளியேறினார். ஓரளவு ஓட்டங்கள் எடுத்த டிராவிட் 29 ஓட்டங்கள் எடுத்தார்.

ஹோப்ஸ் வீசிய 16 ஆவது ஓவரில் பவுச்சர் அதிரடியாக ஓட்டங்கள் கொடுத்து அணிக்கு நம்பிக்கையளித்தார். இந்த ஓ வரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி உட்பட 16 ஓட்டங்கள் கிடைத்தது. பவுச்சர் 39 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் எடுத்தது.

இலகுவான இலக்கை சேஸ் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மார்ஷ், ஹோப்ஸ் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. அதிரடியாக விளையாடிய ஹோப்ஸ் சகிர்கான் ஓவரில் இரண்டு சிக்சரும் பிரவீண் பந்தில் ஒரு சிக்சரும் அடித்து அசத்தினார். இவர் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வினய் பந்தில் ஆட்டமிழக்க அடுத்து போமர்ஸ்பேச் வந்தார்.

மறுமுனையில் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த மார்ஷ் விளாசலுக்கு மாறினார். கும்பிளே பந்தில் ஒரு சிக்சர் அடித்து கலக்கினார். தொடர்ந்து அதிரடி காட்டிய இவர் ஸ்டைன் வீசிய 11 ஆவது ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி உட்பட 21 ஓட்டங்கள் எடுத்து அரைசதம் பதிவு செய்தார்.

கும்பிளே பந்தில் போமர்ஸ் பேச்சும் ஒரு சிக்சர் விளாச, பஞ்சாப் அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறத் தொடங்கியது, மார்ஷ் 74 (2 சிக்சர், 9 பவுண்டரி), போமர்ஸ்பேச் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியிலும் தோல்வியுற்றதன்

மூலம் அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த முதல் அணியாக பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி மாறியுள்ளது.

Email this page Your Opinion Print this page
அரையிறுதி வாய்ப்பை இழந்த டிராவிட் அணி பஞ்சாப்புடனான போட்டியிலும் தோற்றது
சென்னை சுப்ப கிங்ஸுடனான இன்றைய போட்டியில் சச்சின்
மேற்கிந்திய வீரர் சாமுவேல்ஸுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிப்பு
தாமதமாகப் பந்து வீசிய கங்குலியின் அணிக்கு 40,000 ரூபா அபராதம்
`ருவென்ரி-20' இல் பெறும் வெற்றியானது டெஸ்ட் போட்டிக்கு ஒரு போதும் உதவாது
பண்டாரவளையில் தேசிய பமின்ரன் போட்டி
மட்டக்களப்பு அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com