ஹொங்கொங்கில் சுற்றுலாப் பயணிகளின் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானதுடன் 49 பேர் காயமடைந்துள்ளனர்.
நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள சாய்குங்க் என்னும் நகரிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியின் சுற்றுவட்டத்தை பஸ் நெருங்கும் போது சாரதி கட்டுப்பாட்டை இழந்ததனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இப்பயணிகள் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்பது இதுவரை தெளிவாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.