Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இலங்கையில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரத்தை உலகில் எங்கும் காணமுடியாது
[02 - May - 2008] [Font Size - A - A - A]
* சபுகஸ்கந்தையில் ஜனாதிபதி ராஜபக்ஷ

எம்.ஏ.எம்.நிலாம்

ஒரு இனத்தை மற்றொரு இனம் பணயக்கைதியாக வைத்திருப்பதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கையில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளால் எதிர்கொண்ட அழிவுகள் என்றுமே மறக்கப்பட முடியாதவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தை ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத்துடன் இணைந்து ஆரம்பித்து வைத்த பின்னர் அங்கு நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

கிறிஸ்து வருடம் 225 முதலே இலங்கைக்கும் ஈரானுக்கு (பாரசீகம்)மிடையில் உறவுகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வர்த்தக உறவுகளும் காணப்பட்டன. அதற்குச் சான்றாக பாரசீக நாணயங்கள் எம்மிடம் இன்றும் பாதுகாப்பாக உள்ளன. இலங்கை மக்கள் பணம், பொருளைவிட நட்புறவையே மேலாகக் கருதுகின்றனர். ஈரான் மக்கள் காட்டும் அன்பு, பரிவு, கருணை, புரிந்துணர்வு என்பன எம்மை உங்களுடன் இறுக்கமாக இணைத்து வைத்துள்ளது.

உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் யுத்தம் காரணமாக பெரும் இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். பலஸ்தீன- இஸ்ரேல் யுத்தம் போன்று வேறு பல நாடுகளிலும் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் காரணமாக இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்கள் அகதிகளாக்கப்பட்டு முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரங்கள் போன்று உலகில் எங்கும் காணமுடியாது. அந்தளவுக்கு வேதனை நிறைந்தவை அவை. காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 24 மணி நேரத்துக்கிடையில் உடுத்த உடையுடன் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வடக்கிலிருந்து விரட்டப்பட்டனர். இவற்றையெல்லாம் எம்மால் என்றுமே மறக்கமுடியாது.

வடக்கிலிருந்து அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களும் கிழக்கு முஸ்லிம்களும் இந்த நாட்டில் தலைநிமிர்ந்து ஏனைய இனங்களுடன் சமமாக வாழும் சூழ்நிலையை நிச்சயம் உருவாக்குவோம்.

எமது நாட்டின் அபிவிருத்திக்காக ஈரான் வழங்கும் உதவி, ஒத்துழைப்புகளை இலங்கை மக்கள் சதாகாலமும் நினைவில் வைத்திருப்பார்கள். இலங்கையர்கள் நன்றி மறந்தவர்களாக இருக்கமாட்டார்கள். உங்கள் முயற்சிக்கு நாம் கைகொடுத்துதவுவோம் என்று குறிப்பிட்டார்.

Email this page Your Opinion Print this page
உளவியல் ரீதியான வெற்றி எதிர்பார்ப்புடன் கிழக்கில் தேர்தலை நடத்தும் அரசாங்கம்
பயங்கரவாத நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம், புலிகள்
வவுனியா, மணலாறு தாக்குதலில் 4 படையினர் பலி, மூவர் படுகாயம்
கருணா குழு தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு முக்கிய தலைவர்களைக் கடத்த திட்டம்
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 2 விசேட அதிரடிப் படையினர் பலி
தேர்தல் அவதானிப்பாளராக பணியாற்ற சர்வதேச அமைப்புகள் பல மறுப்பு
இந்தியாவின் `பிர்லா' காங்கேசன்துறை செல்ல அனுமதி
வடக்கு, கிழக்கை வைத்து தெற்கில் அரசியல் நடத்தும் சக்திகளால் நாடு மோசமான நிலையில்
கிழக்கு மீண்டும் பிரபாகரனிடம் சிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்
இதயம், கர்ப்பப்பை அகற்றப்பட்டு இலங்கைக்கு குவைத்திலிருந்து அனுப்பப்பட்ட பெண்ணின் சடலம்
தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் யுவதி சைனைட் அருந்தி உயிரிழந்ததாக அறிவிப்பு
இ.தொ.கா. குடையின் கீழ் மலையக மக்கள் அணி திரண்டால் சகல தேவைகளையும் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவேன்
யுத்தத்தை உடனடியாக நிறுத்தி பேச்சு மூலம் இன நெருக்கடிக்கு தீர்வுகாண வலியுறுத்தல்
இரு தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் செங்கலடியில் கடும் மோதல்
சுவிட்ஸர்லாந்தின் பிரபல வேதியியல் நிபுணர் மரணம்
கிழக்கு தேர்தலோடு மு.கா.வை ஓரங்கட்ட நினைத்தோருக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு பெரும் சவால்
தமிழ் - முஸ்லிம் இனவாதத்தை கிழக்கில் விதைக்க முஸ்லிம் காங்கிரஸ் முட்டாள்களின் கட்சியல்ல
கிழக்குத் தேர்தலில் 9 உறுப்பினர்களை ஐ.ம.சுதந்திர முன்னணி பெறும்
எதிரணியோடு இணைவதன் மூலம் முஸ்லிம்களின் உரிமையை ஒரு போதும் வென்றெடுக்க முடியாது
முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்புக்கான ஓர் திட்டமே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலாகும்
சீருடை தரியாதோரிடம் ஆயுதங்களை களைய நடவடிக்கை எடுக்கவும்
ஈழக் கோரிக்கை, நிதி மோசடி நாட்டில் இரு பயங்கரவாதங்கள்
நாட்டில் அடுத்த இரண்டரை மாதத்தில் மோசமான காலநிலையே நிலவும்
விடுதலைப் போராட்டத்தில் பல விஞ்ஞானிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்
சர்வதேசத்தின் தலையீட்டுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய அவசிய நிலைமை
இலங்கையில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரத்தை உலகில் எங்கும் காணமுடியாது
நீதியான நிரந்தர சமாதானத்துக்காகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டி
தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் உரைகள் இன ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்தக்கூடாது
முஸ்லிம் முதலமைச்சர் வந்துவிடக்கூடாதென்பதற்காகவே ஐ.தே.க. வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுச்சேர்ந்தது
`இன்றைய இனவாத அரசை தோற்கடிப்பதற்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்துவோம்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com