நாட்டில் அடுத்துவரும் இரண்டரை மாத காலப்பகுதியில் காலநிலை சீரற்றதாக இருக்குமெனக் காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக காலநிலை அவதான நிலையத்தின் பதில் பணிப்பாளர் ரி.எம்.ஜயதிலக மேலும் தெரிவிக்கையில்;
எதிர்வரும் நாட்களில் நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யக்கூடும். குறிப்பாக தென்மேற்கு பிராந்தியத்தில் அதிக மழை வீழ்ச்சி காணப்படுமெனத் தெரிவித்தார்.
இதேவேளை, இது தொடர்பாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு தொடர்பான பிரிவின் தலைவர் ஆர்.எஸ்.எம்.பண்டார கூறுகையில்;
இம்மழை வீழ்ச்சியின் காரணமாக மலையகப் பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.