Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஈழக் கோரிக்கை, நிதி மோசடி நாட்டில் இரு பயங்கரவாதங்கள்
[02 - May - 2008] [Font Size - A - A - A]
* முறியடிக்க நாளை முதல் போராட்டம்; ஜே.வி.பி. தெரிவிப்பு

ரொஷான்நாகலிங்கம்

ஈழக் கோரிக்கை, நிதி மோசடியென்ற இரு பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் போராட்டத்தை நாளை முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி.)நேற்று தெரிவித்தது.

கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பி.யின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சி எம்.பி.லால்காந்த, ஆட்சியாளருக்கு ஏற்புடையதாகவே அரசியலமைப்பு உள்ளதாகவும் சட்டங்களும் அவர்களுக்கு இசைவாகவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியதுடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் சாடினார்.

அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

அதிகார வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடியதையடுத்தே வேலை நேரம் 8மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.

உலகக் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட இந்தப் போராட்டத்தில் பலர் பலியாகிய போதிலும் தொழிலாளர் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட இன்றைய தினம் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பயங்கரவதாதத்தை ஒழிப்பதற்காகவே இன்றைய ஆட்சியாளர்களுக்கு பொதுமக்கள் ஆதரவு வழங்கியதுடன் பொறுமைகாத்தும் வருகின்றனர். எனினும் வாழ்கைச்செலவு என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது.

வாழ்ச்சைச்செலவுப் புள்ளி மிக மோசமாக அதிகரித்துள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசாங்கம் மௌனமாகவிருக்கின்றது.

எமது நாட்டுக்கு எதிராக எந்தவொரு சதிநடவடிக்கைகளையும் எதிர்ப்பதற்கு ஜே.வி.பி.ஒரு போதும் தயங்கியதில்லை.

இன்று நாம் இரண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஒன்று ஈழப்போருக்கு எதிரான புலிகளின் பயங்கரவாதம் மற்றையது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நிதிமோசடியாகும்.

இந்த இரண்டு பயங்கரவாத நடவடிக்கைகளையும் தோற்கடிப்பதற்கு நாளை முதல் அனைத்துத் தொழிலாளர்களையும் இணைத்து போராட்டங்களை நடத்தவுள்ளோம்.

பொது மக்களை வாட்டி வதைக்கும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கையெடுக்கப்படாவிட்டால் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
உளவியல் ரீதியான வெற்றி எதிர்பார்ப்புடன் கிழக்கில் தேர்தலை நடத்தும் அரசாங்கம்
பயங்கரவாத நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம், புலிகள்
வவுனியா, மணலாறு தாக்குதலில் 4 படையினர் பலி, மூவர் படுகாயம்
கருணா குழு தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு முக்கிய தலைவர்களைக் கடத்த திட்டம்
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 2 விசேட அதிரடிப் படையினர் பலி
தேர்தல் அவதானிப்பாளராக பணியாற்ற சர்வதேச அமைப்புகள் பல மறுப்பு
இந்தியாவின் `பிர்லா' காங்கேசன்துறை செல்ல அனுமதி
வடக்கு, கிழக்கை வைத்து தெற்கில் அரசியல் நடத்தும் சக்திகளால் நாடு மோசமான நிலையில்
கிழக்கு மீண்டும் பிரபாகரனிடம் சிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்
இதயம், கர்ப்பப்பை அகற்றப்பட்டு இலங்கைக்கு குவைத்திலிருந்து அனுப்பப்பட்ட பெண்ணின் சடலம்
தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் யுவதி சைனைட் அருந்தி உயிரிழந்ததாக அறிவிப்பு
இ.தொ.கா. குடையின் கீழ் மலையக மக்கள் அணி திரண்டால் சகல தேவைகளையும் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவேன்
யுத்தத்தை உடனடியாக நிறுத்தி பேச்சு மூலம் இன நெருக்கடிக்கு தீர்வுகாண வலியுறுத்தல்
இரு தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் செங்கலடியில் கடும் மோதல்
சுவிட்ஸர்லாந்தின் பிரபல வேதியியல் நிபுணர் மரணம்
கிழக்கு தேர்தலோடு மு.கா.வை ஓரங்கட்ட நினைத்தோருக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு பெரும் சவால்
தமிழ் - முஸ்லிம் இனவாதத்தை கிழக்கில் விதைக்க முஸ்லிம் காங்கிரஸ் முட்டாள்களின் கட்சியல்ல
கிழக்குத் தேர்தலில் 9 உறுப்பினர்களை ஐ.ம.சுதந்திர முன்னணி பெறும்
எதிரணியோடு இணைவதன் மூலம் முஸ்லிம்களின் உரிமையை ஒரு போதும் வென்றெடுக்க முடியாது
முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்புக்கான ஓர் திட்டமே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலாகும்
சீருடை தரியாதோரிடம் ஆயுதங்களை களைய நடவடிக்கை எடுக்கவும்
ஈழக் கோரிக்கை, நிதி மோசடி நாட்டில் இரு பயங்கரவாதங்கள்
நாட்டில் அடுத்த இரண்டரை மாதத்தில் மோசமான காலநிலையே நிலவும்
விடுதலைப் போராட்டத்தில் பல விஞ்ஞானிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்
சர்வதேசத்தின் தலையீட்டுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய அவசிய நிலைமை
இலங்கையில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரத்தை உலகில் எங்கும் காணமுடியாது
நீதியான நிரந்தர சமாதானத்துக்காகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டி
தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் உரைகள் இன ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்தக்கூடாது
முஸ்லிம் முதலமைச்சர் வந்துவிடக்கூடாதென்பதற்காகவே ஐ.தே.க. வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுச்சேர்ந்தது
`இன்றைய இனவாத அரசை தோற்கடிப்பதற்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்துவோம்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com