Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
எதிரணியோடு இணைவதன் மூலம் முஸ்லிம்களின் உரிமையை ஒரு போதும் வென்றெடுக்க முடியாது
[02 - May - 2008] [Font Size - A - A - A]
* மூதூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாயிஸ்

அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ்பெற்றுக் கொண்டு, எதிரணியினருடன் இணைந்து அரசியல் செய்வதன் மூலம் எமது முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கவோ அன்றி வென்றெடுக்கவோ முடியாது என, கால்நடை வள பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் அண்மையில் மூதூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்த போது அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாணம் கடந்த பல வருட காலமாக அபிவிருத்தி காணாது யுத்த சூழல் நிறைந்த மாகாணமாக மாறியதால் மக்கள் தமது உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தொழில் இழந்து, கல்வி இழந்து மிகவும் மோசமான நிலையில் வாழ்வா, சாவா என்று தெரியாமல் போராடிக் கொண்டிருந்த காலத்தை நாம் மறக்க முடியாது.

இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் யுத்த சூழல் நிலவிய போதிலும் கிழக்கின் உதயம் என்ற பேரில் மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து இன்று கிழக்கு மாகாண ஒட்டுமொத்த சமூகமும் நிம்மதிப் பெருமூச்சு விடுமளவிற்கு நிலைமை முன்னேறியுள்ளது.

மூதூர் மக்களின் அடிப்படைத் தேவை என்பது பலவாறாக இருந்த போதிலும் மிக முக்கியமாக பாதுகாப்பு, மீன்பிடித் தொழில் தடை நீக்கம் என்பவற்றை இன்று இந்த அரசாங்கம் தீர்த்து வைத்துள்ளது. கடந்த 25 வருட காலமாக நடைபெற்று வரும் இந்த யுத்தம் இன்னும் தொடர்ந்தால் அடுத்துவரும் சந்ததியினருக்கு இந்த நாட்டில், இந்த மண்ணில் நாம் எதனை விட்டுவிட்டு செல்லப் போகிறோம்? கிழக்கு மாகாண முஸ்லிம்களை நிம்மதியாக வைக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு முஸ்லிம்களின் தேசிய அரசியல் கட்சியான ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையே சாரும்.

முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தை ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் இலட்சியம், கனவு எல்லாமே இந்த மண்ணின் முஸ்லிம்கள் சுய உரிமையுடன் நிம்மதியாக வாழவேண்டும் என்பது தான். இதனை நாம் அடையும் காலம் மிகத் தூரமில்லை. பெருந்தலைவர் அஷ்ரப்பின் கனவை நனவாக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் எம்முன் வந்துள்ளது.

முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நாம் பெற்றுக் கொள்வதன் மூலம் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் சுய நிர்ணயம், சுய கௌரவம், நிம்மதி, பாதுகாப்பு, ஜனநாயகம் இவையனைத்தும் பாதுகாக்கப்படும். வெறுமனே அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டு எதிரணி வரிசையில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்வதன் மூலம் இந்த நாட்டின் முஸ்லிம்களை பாதுகாக்கவும், உரிமைகளை வென்றெடுக்கவும் ஒரு போதும் முடியாது.

பெருந்தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கியது அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுவதற்கல்ல. அரசாங்கத்திலேயே இருந்து கொண்டு போராடியும், அரசியல் பேரம்பேசியும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்கத் தான் அவர் அரசியல் செய்து வந்தார். எனவேதான் நாம் அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் விமர்சித்துக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புவதன் மூலம் நடக்கப் போவது ஒன்றுமில்லை.

இக்கூட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Email this page Your Opinion Print this page
உளவியல் ரீதியான வெற்றி எதிர்பார்ப்புடன் கிழக்கில் தேர்தலை நடத்தும் அரசாங்கம்
பயங்கரவாத நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம், புலிகள்
வவுனியா, மணலாறு தாக்குதலில் 4 படையினர் பலி, மூவர் படுகாயம்
கருணா குழு தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு முக்கிய தலைவர்களைக் கடத்த திட்டம்
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 2 விசேட அதிரடிப் படையினர் பலி
தேர்தல் அவதானிப்பாளராக பணியாற்ற சர்வதேச அமைப்புகள் பல மறுப்பு
இந்தியாவின் `பிர்லா' காங்கேசன்துறை செல்ல அனுமதி
வடக்கு, கிழக்கை வைத்து தெற்கில் அரசியல் நடத்தும் சக்திகளால் நாடு மோசமான நிலையில்
கிழக்கு மீண்டும் பிரபாகரனிடம் சிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்
இதயம், கர்ப்பப்பை அகற்றப்பட்டு இலங்கைக்கு குவைத்திலிருந்து அனுப்பப்பட்ட பெண்ணின் சடலம்
தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் யுவதி சைனைட் அருந்தி உயிரிழந்ததாக அறிவிப்பு
இ.தொ.கா. குடையின் கீழ் மலையக மக்கள் அணி திரண்டால் சகல தேவைகளையும் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவேன்
யுத்தத்தை உடனடியாக நிறுத்தி பேச்சு மூலம் இன நெருக்கடிக்கு தீர்வுகாண வலியுறுத்தல்
இரு தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் செங்கலடியில் கடும் மோதல்
சுவிட்ஸர்லாந்தின் பிரபல வேதியியல் நிபுணர் மரணம்
கிழக்கு தேர்தலோடு மு.கா.வை ஓரங்கட்ட நினைத்தோருக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு பெரும் சவால்
தமிழ் - முஸ்லிம் இனவாதத்தை கிழக்கில் விதைக்க முஸ்லிம் காங்கிரஸ் முட்டாள்களின் கட்சியல்ல
கிழக்குத் தேர்தலில் 9 உறுப்பினர்களை ஐ.ம.சுதந்திர முன்னணி பெறும்
எதிரணியோடு இணைவதன் மூலம் முஸ்லிம்களின் உரிமையை ஒரு போதும் வென்றெடுக்க முடியாது
முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்புக்கான ஓர் திட்டமே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலாகும்
சீருடை தரியாதோரிடம் ஆயுதங்களை களைய நடவடிக்கை எடுக்கவும்
ஈழக் கோரிக்கை, நிதி மோசடி நாட்டில் இரு பயங்கரவாதங்கள்
நாட்டில் அடுத்த இரண்டரை மாதத்தில் மோசமான காலநிலையே நிலவும்
விடுதலைப் போராட்டத்தில் பல விஞ்ஞானிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்
சர்வதேசத்தின் தலையீட்டுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய அவசிய நிலைமை
இலங்கையில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரத்தை உலகில் எங்கும் காணமுடியாது
நீதியான நிரந்தர சமாதானத்துக்காகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டி
தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் உரைகள் இன ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்தக்கூடாது
முஸ்லிம் முதலமைச்சர் வந்துவிடக்கூடாதென்பதற்காகவே ஐ.தே.க. வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுச்சேர்ந்தது
`இன்றைய இனவாத அரசை தோற்கடிப்பதற்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்துவோம்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com