Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தமிழ் - முஸ்லிம் இனவாதத்தை கிழக்கில் விதைக்க முஸ்லிம் காங்கிரஸ் முட்டாள்களின் கட்சியல்ல
[02 - May - 2008] [Font Size - A - A - A]
* பஷீர் சேகுதாவூத்

முதலமைச்சராவோம்!... என்று ஊரூராகச் சொல்லிக்கொண்டு தமிழ் - முஸ்லிம் இனவாதத்தை இம்மாகாணம் முழுவதும் விதைக்க முஸ்லிம் காங்கிரஸ் முட்டாள்களின் கட்சியல்ல என்று ஐ.தே.க. முதன்மை வேட்பாளரும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளர்களை ஆதரித்து ஏறாவூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பஷீர் சேகுதாவூத் அங்கு உரையாற்றுகையில்;

"கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயவோ அவை தொடர்பாக கலந்துரையாடவோ இந்த அரசாங்கத்திற்கு கிஞ்சித்தும் அக்கறையில்லை. அவர்களின் நோக்கமெல்லாம் முஸ்லிம்களின் அரசியற் பலமாக விளங்கும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்துடன் சேர்த்துவைத்துக்கொண்டு ஏனைய முஸ்லிம் அமைச்சர்களைப் போல ஊமைகளாக இருக்கச் செய்ய வேண்டும். அல்லது அந்தக் கட்சியை இல்லாமலாக்கிவிட வேண்டும். அத்துடன், கிழக்கில் அரசின் செல்வாக்கைத் தக்கவைக்க பிள்ளையான் தலைமையிலான ரி.எம்.வி.யை அரவணைத்துக் கொள்ள வேண்டுமென்பதுதான்.

நாங்களும் அரசாங்கத்துடன் இருந்து முஸ்லிம்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறி தீர்வைக் காணலாம் என பலமுறை முயற்சிகள் செய்து பார்த்துவிட்டுத்தான், இந்த அரசாங்கத்தை கைகழுவி விட்டு வெளியேறினோம். எமது வெளியேற்றத்திற்கு பிறகு அரசு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை பகிரங்கமாகவே அரவணைத்துக்கொண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டது.

அப்போதெல்லாம் பிரசார மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் அரசாங்கத்தையும், பிள்ளையான் குழுவினரையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தவர்களெல்லாம் இப்போது முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்காக அரசாங்கத்தைப் புகழ்ந்தும் மகிந்த சிந்தனையைப் பாராட்டியும் பேசிவருகிறார்கள்.

இவர்களின் முதலமைச்சர் கனவு எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி தேர்தல் முடிவு வெளியானதும் கலைவதுடன், ஐக்கிய தேசியக்கட்சி இம் மாகாணத்தில் வாழும் தமிழ் - சிங்கள - முஸ்லிம் மக்களின் அதிகப்படியான வாக்குப்பலத்தை பெற்று 20 உறுப்பினர்களுடன் அமைக்கவுள்ள கிழக்கு மாகாண சபைக்கு அவர்கள் உறுப்பினர்களாக வந்தாலும் எமது சமூகத்தில் விழிப்பார்களா என்பது சந்தேகத்துக்குரியதே" என்று தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
உளவியல் ரீதியான வெற்றி எதிர்பார்ப்புடன் கிழக்கில் தேர்தலை நடத்தும் அரசாங்கம்
பயங்கரவாத நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம், புலிகள்
வவுனியா, மணலாறு தாக்குதலில் 4 படையினர் பலி, மூவர் படுகாயம்
கருணா குழு தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு முக்கிய தலைவர்களைக் கடத்த திட்டம்
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 2 விசேட அதிரடிப் படையினர் பலி
தேர்தல் அவதானிப்பாளராக பணியாற்ற சர்வதேச அமைப்புகள் பல மறுப்பு
இந்தியாவின் `பிர்லா' காங்கேசன்துறை செல்ல அனுமதி
வடக்கு, கிழக்கை வைத்து தெற்கில் அரசியல் நடத்தும் சக்திகளால் நாடு மோசமான நிலையில்
கிழக்கு மீண்டும் பிரபாகரனிடம் சிக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்
இதயம், கர்ப்பப்பை அகற்றப்பட்டு இலங்கைக்கு குவைத்திலிருந்து அனுப்பப்பட்ட பெண்ணின் சடலம்
தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் யுவதி சைனைட் அருந்தி உயிரிழந்ததாக அறிவிப்பு
இ.தொ.கா. குடையின் கீழ் மலையக மக்கள் அணி திரண்டால் சகல தேவைகளையும் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவேன்
யுத்தத்தை உடனடியாக நிறுத்தி பேச்சு மூலம் இன நெருக்கடிக்கு தீர்வுகாண வலியுறுத்தல்
இரு தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் செங்கலடியில் கடும் மோதல்
சுவிட்ஸர்லாந்தின் பிரபல வேதியியல் நிபுணர் மரணம்
கிழக்கு தேர்தலோடு மு.கா.வை ஓரங்கட்ட நினைத்தோருக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு பெரும் சவால்
தமிழ் - முஸ்லிம் இனவாதத்தை கிழக்கில் விதைக்க முஸ்லிம் காங்கிரஸ் முட்டாள்களின் கட்சியல்ல
கிழக்குத் தேர்தலில் 9 உறுப்பினர்களை ஐ.ம.சுதந்திர முன்னணி பெறும்
எதிரணியோடு இணைவதன் மூலம் முஸ்லிம்களின் உரிமையை ஒரு போதும் வென்றெடுக்க முடியாது
முஸ்லிம்களின் நில ஆக்கிரமிப்புக்கான ஓர் திட்டமே கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலாகும்
சீருடை தரியாதோரிடம் ஆயுதங்களை களைய நடவடிக்கை எடுக்கவும்
ஈழக் கோரிக்கை, நிதி மோசடி நாட்டில் இரு பயங்கரவாதங்கள்
நாட்டில் அடுத்த இரண்டரை மாதத்தில் மோசமான காலநிலையே நிலவும்
விடுதலைப் போராட்டத்தில் பல விஞ்ஞானிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்
சர்வதேசத்தின் தலையீட்டுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டிய அவசிய நிலைமை
இலங்கையில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரத்தை உலகில் எங்கும் காணமுடியாது
நீதியான நிரந்தர சமாதானத்துக்காகவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டி
தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் உரைகள் இன ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்தக்கூடாது
முஸ்லிம் முதலமைச்சர் வந்துவிடக்கூடாதென்பதற்காகவே ஐ.தே.க. வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுச்சேர்ந்தது
`இன்றைய இனவாத அரசை தோற்கடிப்பதற்காக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை பயன்படுத்துவோம்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com