மட்டக்களப்பு செங்கலடிச்சந்தியில் நேற்று வியாழக்கிழமை இரவு இரு தமிழ் அரசியல் கட்சிகளிடையே இடம்பெற்ற மோதல் சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு 9.45 மணியளவில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் செங்கலடிச் சந்தியில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த வேளையில் அவ்விடத்திற்கு இரு மோட்டார் சைக்கிளில் வந்த வேறு ஒரு தமிழ்க்கட்சியின் உறுப்பினர்கள் கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியிலிருந்த படையினரும் இரு தமிழ்க்கட்சியின் உறுப்பினர்களும் சுமார் ஒரு மணிநேரம் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர்.
இதனால் நேற்றிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, எனினும் உடனடியாக சேதவிபரங்கள் எதனையும் அறியமுடியவில்லை.